Total Post

சாதி சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பித்து எப்படி ? How to apply community certificate in Tamilnadu?

Community Certificate சாதி சான்றிதழ் என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட சாதி மற்றும் மதம் சேர்ந்தவர் என்பதற்கான சான்றாகும், அரசிடமிருந்து கல்வி , வேலைவாய்ப்பு மற்றும் அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு சாதி சான்றிதழ் தேவைப்படுகிறது.

பட்டியல் இன மக்கள், பட்டியலிடப்பட்ட பழங்குடி மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் போன்ற குடிமகனின் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என்பதைச் அரசாங்கத்தால் வழங்கப்படும் ஆவணமாகும், இந்த சான்றிதழ் வருவாய்த் துறையால் வழங்கப்படும்.

பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ஒரு நபரின் சாதி மதம் தீர்மானிக்கப்படுகிறது. 15 நாட்களுக்குள் இந்த சான்றிதழ்கள் வழங்கப்படும்.மேலும் கால அவகாசம் ஆகினால் சம்மந்தப்பட்ட அலுவரரை நேரில் சென்று அணுகவும்.

சாதி மதம் சான்றிதழுக்கு ஒருவர் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் பின்வருமாறு:

  • விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
  • தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் நபருக்கு மூன்று வயது முடிந்திருக்க வேண்டும்.

சாதி சான்றிதழுக்கு பின்வரும் ஆவணங்கள் தேவை.

  • விண்ணப்பதாரர் புகைப்படம்
  • விண்ணப்பதாரர் ஆதார் அட்டை.
  • ரேஷன் கார்டு.
  • விண்ணப்பதாரர் சாதிச் சான்றிதழ் அல்லது தந்தையின் சாதிச் சான்றிதழ் அல்லது தாயின் சாதிச் சான்றிதழ் அல்லது உடன்பிறந்தவர்களின் சாதிச் சான்றிதழ்.விண்ணப்பதாரரின் சுய அறிவிப்பு (Self-Declaration).

சாதி மதம் சான்றிதழுக்கு எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பதாரர் சாதிச் சான்றிதழ்களுக்கு ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பதாரர் ஆன்லைனில் விண்ணப்பிக்க நாம் வீட்டில் இருந்தபடியே https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதள மூலமும் அல்லது இ-சேவை மையங்கள் அல்லது CSC (பொது சேவை மையங்கள்) விண்ணப்பிக்கலாம்.

சாதி சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான முறை ?

தமிழ்நாட்டில் சாதி சான்றிதழை ஆன்லைனில் விண்ணப்பிக்க, கீழே கொடுக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றவும்

படி 1: https://www.tnesevai.tn.gov.in தமிழ்நாடு அரசு இணையதளத்தில் உள்நுழைக.
படி 2: பயனாளர் உள்நுழைக (Citizen Login) என்பதை கிளிக் செய்யவும்.
படி 3: புதிய பக்கம் தோன்றும். அதில், பதிவு செய்யப்பட்ட உங்கள் Username and Password உள்ளீடு செய்து பின் கேப்ட்சா குறியீடு உள்ளீடு செய்து Login என்பதை கிளிக் செய்யவும்..
படி 4: கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் DEPARTMENT WISE -- Revenue Department -- REV-101 Community certificate என்பதை கிளிக் செய்து தேர்வுசெய்யவும்.

படி 5: புதிய முகப்பு பக்கம் தோன்றும். அதில் , Process என்பதை கிளிக் செய்யவும். பிறகு, உங்களிடம் கேன் CAN நம்பேர் இல்லை என்றால் Register CAN என்பதை கிளிக் செய்து உங்கள் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். உங்களிடம் கேன் CAN நம்பர் இருந்தால் அதை உள்ளிடவும், மறந்து இருந்தால் உங்கள் மொபைல் நம்பர் அல்லது உங்கள் ஆதார் நம்பர் உள்ளீடு செய்து Search என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

படி 6: உங்களோட விவரங்களை சரிபார்த்து பின்பு உறுதிப்படுத்தவும் கிளிக் செய்யவும். பின்பு Generate OTP என்பதை கிளிக் செய்து பின் உங்க மொபைல் எண்ணுக்கு வரும் OTP யை உள்ளிடவும் பிறகு Proceed என்பதை என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
படி 7: புதிய பக்கத்தில், நீங்கள் கொடுக்கப்பட்டுள்ள CAN விவரங்களை சரிபார்த்து கொள்ளவும். பிறகு, இந்த பக்கம் இறுதியில் Form Details

  • Fathers Community
  • Mothers Community
  • Fathers Caste
  • Mothers Caste
  • Requested Community
  • Requested Caste என்பதை தேர்வு செய்ய வேண்டும். மேலும்

Whether any of the Applicants family members possess permanent online certificate issued by competent Revenue Authority NO என்பதை தேர்வு செய்து பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

படி 8: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணத்தின் நகலை ஸ்கேன் காப்பிய யாக SCAN COPY பதிவேற்றம் (Upload) செய்யவும்

  • Photo
  • Any Address Proof (Aadhar and Ration Card)
  • Old Community Certificate of Father or Community Certificate of Mother or Community Certificate of Siblings Mandatory
  • Self-Declaration of Applicant

படி 9: இறுதியாக, Make a Payment என்பதை கிளிக் செய்து RS:60 ரூபாய் இணையதளம் மூலம் செலுத்திய பின்பு, நீங்கள் விண்ணப்பம் செய்யப்பட்ட நகல் அதாவது ஒப்புகை சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.

ஜாதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்வது எப்படி ?

படி 1: https://tnedistrict.tn.gov.in இணையதளத்தில் உள்நுழைக.

படி 2: தேடல் பெட்டியில் (acknowledgement no) ஒப்புகை சீட்டு சான்றிதழ் எண்ணை உள்ளிடவும், தேடுக என்ற Icon என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 3: நீங்கள் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம், மேலும் உங்கள் விண்ணப்பம் அனுமதிக்கப்பட்டு இருந்தால் அதை Download என்பதை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.