Total Post

ஸ்மார்ட் கார்டில் பெயர் சேர்ப்பது எப்படி? ரேஷன் கார்டு பெயர் சேர்க்க | How to Add New Family Member in Smart Ration Card ?

தமிழ்நாடு அரசு மக்களுக்காக எளிதில் குடும்பத்தில் உள்ள நபர்களை சேர்க்கவும் நீக்கவும் மற்றும் பல வசதியுடன் Tnpds.gov.in இணையதளம் உருவாக்கப்பட்டது. ஸ்மார்ட் ரேஷன் கார்டு உங்கள் குடும்ப உறுப்பினரை சேர்ப்பதற்கு முன் நீங்கள் ஏற்கனவே வேறு ஒரு குடும்ப அட்டையில் நீங்கள் சேர்க்க விரும்பும் நபரின் ஆதார் பதிவு இருந்தால் முதலில் அந்த உறுப்பினர் நீக்க வேண்டும். அதன் பிறகு குடும்ப உறுப்பினரை சேர்க்கவும்.

ஸ்மார்ட் ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினரை சேர்க்கவோ, நீக்கவோ, முகவரி மாற்றவோ காலஅவகாசம் 1 நாள் இருந்து 4 நாட்கள் எடுத்து கொள்வார்கள், மேலும் 4 நாட்கள் பிறகும் உங்கள் கோரிக்கை செயல்படுத்தாமல் இருந்தால் நீங்கள் நேரில் சென்று வட்ட வழங்கல் அதிகாரியை தொடர்பு கொள்ளவும்.

ஸ்மார்ட் ரேஷன் கார்டு குடும்ப உறுப்பினரை சேர்ப்பது எப்படி?

படி 1: தமிழ்நாடு அரசு இணையதளத்தில் https://www.tnpds.gov.in/ முதலில் உள்நுழைக.

படி 2: இணையதளத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் கிடைக்கிறது,இதில் ஏதாவது ஒன்று தேர்வுசெய்யவும்.

படி 3: கீழே கொடுக்கப்பட்ட சேவையில் உறுப்பினரை சேர்க்க தேர்வு செய்து கிளிக் செய்யவும், அதன் பிறகு புதிய பக்கம் தோன்றும் அதில் பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணை உள்ளீடு செய்து பின் கேப்ட்சா குறியீடு உள்ளீடு செய்து பதிவு செய் என்பதை கிளிக் செய்தபின் நீங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வந்த 7 இலக்க கடவுச்சொல் (OTP) எண்ணை உள்ளிடவும், பதிவு செய் கிளிக் செய்ய வேண்டும்.

Add New Family Member Smard Ration Card

படி 4: புதிய பக்கம் தோன்றும் அதில், நீங்கள் சேர்க்க விரும்பும் குடும்ப உறுப்பினர் விவரங்களை பெயர், பிறந்த தேதி, பாலினம், உறவுமுறை உள்ளீடு செய்ய வேண்டும்.

படி 5: நீங்கள் சேர்க்க விரும்பும் நபரின் ஆதார் அட்டை அல்லது பிறப்பு சான்றிதழ் ( 5 வயதுக்குள் இருப்பவர் மட்டும்) தேர்ந்தெடுத்து. பின்பு, நீங்கள் தேர்வு செய்த ஆதார் அட்டை நகல் அல்லது பிறப்பு சான்றிதழ் நகலை பதிவேற்ற (Upload) செய்யவும், உங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து உறுப்பினரை சேர்க்க என்பதை கிளிக் செய்யவும்.

படி 6: மேலும் நீங்கள் உள்ளீடு செய்த அணைத்து விவரமும் சரிபார்த்து பின்பு உறுதிப்படுத்தல் என்பதை தேர்வு செய்யவும், இறுதியாக பதிவு செய் என்பதை என்பதை கிளிக் செய்யவும.

TNPDS Smard Card Add Members in Tamilnadu

படி 7: நீங்கள் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் குறிப்பு எண் கிடைக்கும் மற்றும் நீங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறிப்பு வந்திருக்கும், அந்த என்னை வைத்து உங்கள் விண்ணப்ப நிலையை சரிபார்த்து கொள்ளவும்.