RTE கல்வி உரிமைச் சட்டம், தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் இந்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய பின்னணியில் உள்ள மாணவர்களுக்காக தனியார் பள்ளிகளில் 25% இட ஒத்துகிட்டு வழங்கப்படுகிறது். எனவே, இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள தமிழக மக்கள் விண்ணப்பிக்கலாம்.
தாழ்த்தப்பட்ட பின்னணியைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை RTE சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் LKG மற்றும் 1 ஆம் வகுப்பில் சேர்க்கலாம்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் சேர்க்கைக்கு மாவட்ட கல்வி அலுவலகங்களில் இலவசமாக விண்ணப்பிக்கலாம், RTE சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் rte.tnschools.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.மேலும் அவர்கள் பொருத்தமான ஆவணங்களை போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும்.
RTE கல்வி உரிமைச் சட்டம் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:
- பிறந்த தேதி (01-08-2020 முதல் 31-07-2021 வரை) - எல்.கே.ஜி.க்கு LKG தகுதியானவர்
- பிறந்த தேதி (1-08-2018 முதல் 31-07-2019 வரை) - 1ஆம் வகுப்புக்குத் தகுதியானவர்
RTE கல்வி உரிமைச் சட்டம் விண்ணப்பம் செய்ய தேவைப்படும் ஆவணங்கள்:
- விண்ணப்பதாரர் புகைப்படம்
- விண்ணப்பதாரர் ஆதார் அட்டை
- ரேஷன் கார்டு.
- வருமானச் சான்று (Income Certificate)
- சாதிச் சான்றிதழ் (Community Certificate)
- வருமான வரி அறிக்கை (Income Tax Return)
- பிற ஆவணங்கள்
RTE கல்வி உரிமைச் சட்டம் விண்ணப்பம் செய்வது எப்படி?
படி 1: https://rteadmission.tnschools.gov.in/home என்ற இணையதளத்தில் செல்லவும்.
படி 2: Start Application தேர்வு செய்து கிளிக் செய்ய வேண்டும்.
படி 3: புதிய பக்கம் தோன்றும்.
Personal Details: அதில்:
- குழந்தையின் பெயர்,
- பாலினம்,
- பிறந்த தேதி,
- கடவுச்சொல் (Password),
- கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக (Confirm Password),
- மதம், Community[சமூகம்],
- Mobile No[அலைபேசி எண்],
- Eligible Class as per DOB [பிறந்த தேதிப்படி விண்ணப்பிக்கக்கூடிய வகுப்பு],
- Email ID(If any) [மின்னஞ்சல் ஐடி (ஏதேனும் இருந்தால்)]
Parent Details: Father[தந்தை] அல்லது Mother[தாய்] அல்லது Guardian[பாதுகாவலர்] ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர், Father Details தந்தையின் விவரங்கள்:
- Fathers Name தந்தையின் பெயர்,
- தந்தையின் தொழில்,
- Total Annual Income of Parents / Guardian from all sources[குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம்], தங்கள் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் குறைவானதா? Yes or No பூர்த்தி செய்து SAVE பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
Address Details:
- வீட்டு முகவரி,
- அஞ்சல் குறியீடு,
- மாவட்டம் போன்றவற்றை பூர்த்தி செய்து SAVE பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
Documents:
- Student Photo[மாணவர் புகைப்படம்] Width-150px, Heigth-175px and Image size should not exceed 100 KB
- Proof Of Birth[பிறப்பு சான்று]
- Parent ID[பெற்றோர் அடையாள அட்டை]
- Address Proof[முகவரி சான்று]
- Income Certificate[வருமான சான்றிதழ்]
Select School:
இறுதியாக, உங்கள் குழந்தை படிக்க விரும்பும் பள்ளியை தேர்வு செய்து Submit பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்