ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மற்றும் கல்லூரியில் தமிழில் மட்டும் படித்த படித்த மாணவர்களுக்கு 20 சதவீதம் தமிழ்நாடு அரசு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இதுநாள்வரை தமிழ் வழியில் படித்த சான்றிதழ்களை பள்ளிகள், கல்லுாரிகளில் நேரில் சென்று பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பெற வேண்டி இருந்தது. ஆனால், இனி தமிழ் வழி சான்றிதழ் ஆன்லைனிலும் விண்ணபித்து பெற்று கொள்ளலாம் என்ற முறையை பள்ளி கல்விதுறை அறிமுகபடுத்தியுள்ளது. அதனை எவ்வாறு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்பதை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
PSTM CERTIFICATE தமிழ் வழியில் படித்த சான்றிதழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:
- தமிழ் வாழில் படித்த பள்ளியின் TRANSFER CERTIFICATE (TC).
- ஆதார் அட்டை
தமிழில் படித்ததற்கான உங்களிடம் இடமாற்றச் சான்றிதழ் TC இல்லையென்றால். நீங்கள் படித்த பள்ளியில் சென்று நீங்கள் படித்த வருடத்தை கூறி நீங்கள் படித்ததற்கான ஆவணங்களை சரி பார்ப்பின் பிறகு தலைமை ஆசிரியர் ஒப்புதல் உடன் நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கும் ஒப்புதல் தரவில்லைவில்லை என்றால், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருப்பீர்கள் ஒரு பள்ளியில், அதற்கான TC வேறொரு பள்ளியில் கொடுத்து இருப்பீர்கள், நீங்கள் கொடுத்த பள்ளியில் அதனுடைய நகல்களை கேட்டு பெற்றுக் கொள்ளவும். பிறகு விண்ணப்பிக்கலாம்
PSTM CERTIFICATE தமிழ் வழியில் படித்த சான்றிதழ் விண்ணப்பம் செய்வது எப்படி?
படி 1: TNeGA https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் செல்லவும்.
படி 2: குடிமகன் உள்நுழை பொத்தானைக் கிளிக் செய்து பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். பின்னர், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, உள்நுழை பொத்தானைக் கிளிக் செய்யவும்.
படி 3: புதிய பக்கம் தோன்றும். அதில், Commissionerate of School Education விருப்பத்தை கிளிக் செய்யவும்.
பிறகு, Revenue Department கிளிக் செய்யவும். பிறகு, DSE-101 Issuance of PSTM Certificate for Govt Schools என்பதை தேர்ந்தெடுத்து கிளிக் செய்யவும்.
படி 4: புதிய பக்கம் தோன்றும். அதில்: உங்களுடைய பெயர், பிறந்த தேதி,பெற்றோர் பெயர், தொலைபேசி எண் மற்றும் EMIS ID உங்கள் TC அல்லது மதிப்பெண் பட்டியல் இருந்தால் அதை உள்ளிடவும் உள்ளிட வேண்டும்.
படி 5: மேலும், School Details நீங்கள் படித்த வருடம் மற்றும் நீங்கள் படித்த பள்ளியின் பெயரை தேர்வு செய்யவும்
படி 6: Upload Copy of TC: தமிழ் வாழில் படித்த பள்ளியின் TRANSFER CERTIFICATE (TC) நகலை ஸ்கேன் காப்பியாக SCAN COPY பதிவேற்றம் (Upload) செய்யவும்
போன்ற எல்லாம் சரியான விவரங்களை பூர்த்தி செய்து Submit பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
படி 8: இறுதியாக, Make a Payment என்பதை கிளிக் செய்து ரூ:60 இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். பின்பு, நீங்கள் விண்ணப்பம் செய்யப்பட்ட ஒப்புகை சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.