Total Post

வில்லங்கச் சான்று EC எவ்வாறு பதிவிறக்கம் செய்வது? | Encumbrance Certificate View Download

வில்லங்கம் சான்றிதழ் என்பது முதலில் யாருக்கு பட்டா நிலம் வழங்கப்பட்டது முதல், இன்று தற்போதைய யாரிடம் சொத்தின் உரிமை உள்ளது என்றும்
யாரிடம் இருந்து சொத்தது வாங்கியது வரையிலான மொத்த விவரமும் வில்லங்கம் சான்றிதழ் கொடுக்கப்பட்டு இருக்கும், இது வரலாற்றிலிருந்து தற்போதைய சொத்து பற்றிய விரிவான தகவல்களை வழங்கப்பட்டு இருக்கும், மேலும் சொத்துக்கான இந்த EC Encumbrance Certificate அரசாங்கத்தால் சார்பதிவாளர் மூலம் பதிவு செய்த ஒரு ஆவணம். வில்லங்கம் EC நேரடியாகவும் மற்றும் இணையவழி மூலமும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

வில்லங்கம் சான்றிதழ் EC எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?

படி 1: அங்கீகாரம் பெற்ற அரசு இணைய https://tnreginet.gov.in/ வளையதளத்தில் முகப்பு பக்கம் செல்ல வேண்டும்.

படி 2: உங்களுக்கு விருப்ப பட்ட மொழியை தேர்வு செய்யவும் தமிழ் அல்லது English (நாங்கள் தமிழ் மொழி தேர்ந்தெடுத்து விளக்கமளிக்கிறோம்).

படி 3: மேலே கொடுக்கப்பட்ட மெனுவிலிருந்து மின்னணு சேவைகள் - வில்லங்கச் சான்று - வில்லங்கச் சான்று விவரம் பார்வையிடுதல் தேர்வு செய்ய வேண்டும்.

Online EC Download

படி 4: உங்கள் நிலத்தின் சொத்தானது எந்த மண்டலம் - மாவட்டம் - சார்பதிவாளர் அலுவலகம் தேர்ந்தெடுக்கவும், உங்களுக்கு தேவைப்படும் வில்லங்கச்சான்று விவரத்தின் ஆரம்ப நாள் மற்றும் முடிவு நாள் தேர்ந்தெடுக்கவும்.

படி 5: உங்கள் கிராமத்தைத் தேர்ந்தெடுக்கவும். பின்பு , புல எண் மற்றும் உட்பிரிவு எண்ணை உள்ளீடு செய்து சேர் என்பதைக் கிளிக் செய்யவும், பாதுகாப்புக் குறியீட்டைத் (CAPTCHA) தட்டச்சு செய்யவும் மற்றும் தேடுக பொத்தானைக் கிளிக் செய்யவும்.

Villanga Sanrithal EC Download

படி 6: முடிவில் திருத்த இயலாநிலை ஆவண வடிவத்தை பதிவிறக்கம் செய்ய என்பதை தேர்வு செய்து கிளிக் செய்த பின், உங்கள் மொபைல் அல்லது கம்ப்யூட்டர் டவுன்லோட் பகுதியல் வில்லங்க சான்று பதிவிறக்கம் செய்ததை சரிபார்க்கவும்.

Villangam EC Patta Chitta Download