Total Post

பிறப்புச் சான்றிதழின் பெயரை திருத்தம் செய்வது எப்படி? | How to change name in Birth Certificate?

பிறப்புச் சான்றிதழ் என்பது ஒரு ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இந்த தேதியில், இந்த நேரத்தில், இந்த இடத்தில், இந்த குழந்தை பிறந்துள்ளது என்பதற்கான உறுதிப்படுத்தும் ஆவணம் ஆகும். இந்த பிறப்புச் சான்றிதழில் ஏதாவது பிழை இருந்தால் பெயர், பிறந்த தேதி, அம்மா, அப்பா பெயர்கள் மற்றும் முகவரி தவறாக இருந்தால் திருத்தம் செய்து கொள்ளலாம்..

How to Change Name in Birth Certificate gazette?
கெஜட்டில் பிறப்பு சான்றிதழில் பெயர் திருத்தம் செய்வது எப்படி?

குழந்தை பிறந்த தேதியிலிருந்து இரண்டு வயது உட்பட்டு இருந்தால், ஏற்கனவே நீங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள இடத்தில் சென்று நகராட்சிகள் அல்லது மாநகராட்சிகளின் பதிவாளர்களை அல்லது மருத்துவமனையில் குழந்தை பிறந்திருந்தால் மருத்துவமனையில் குழந்தை பிறப்பு பதிவாளர் இருப்பார்கள், அவர்களை நேரில் சென்று சரியான விவரங்களை சொல்லி உங்கள் குழந்தையின் பெயரை திருத்தம் செய்து கொள்ளலாம்.

  • இரண்டு வயதிற்கு மேல் இருந்தால் கெஸட் ஆபீஸ் (Gazettes-Stationery Printing Department) நேரில் சென்று நீங்கள் எதற்காக மாற்ற விரும்புகிறிர்கள் என்று காரணம் சரியாக கூறி, உங்களின் குழந்தையின் பெயரை மாற்றிக் கொள்ளலாம்.அல்லது ,
  • நேரில் செல்ல நேரமில்லை என்றால் கெஸட் ஆபீஸ் (Gazettes) தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு ஒரு முறை பெயர் திருத்தத்திற்கான விளக்கங்களில் கேட்டுவிட்டு, அதன்படி அவர்கள் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் நீங்கள் தபால் மூலம் அனுப்பி விடவும், அவர்கள் ஒரு முறை எல்லா விவரங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்கள் பெயர் அல்லது குழந்தையின் பெயரை திருத்தி தருவார்கள் அல்லது பெயர் மாற்றம் செய்து தருவார்கள்.

How to change name in birth certificate of child?
பெயர் திருத்தத்திற்கான விண்ணப்பம் செய்யும் முறை ?

படி 1: முதலில் https://www.stationeryprinting.tn.gov.in/forms.html தமிழ்நாடு அரசு இணையதளத்தில் உள்நுழைக.

படி 2: இணையதளத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் பெயர் திருத்தத்திற்கான படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எந்த மொழியில் மாற்ற விரும்புகிறீர்களோ அதன்படி அதற்கான விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து மற்றும் பிரிண்ட் செய்து அதை பூர்த்தி செய்த பின்னர்,

படி 3: மறுபடியும் https://www.karuvoolam.tn.gov.in/challan/echallan என்ற இணையதளத்தில் சென்று தமிழில் பெயர் மாற்ற விரும்பினால் 150 ரூபாய் கட்டணம் அல்லது ஆங்கிலத்தில் பெயர் திருத்தம் என்றால் 750 ரூபாய் ஆன்லைன் மூலம் கட்டண தொகை செலுத்தி பின்னர், அதனுடைய கட்டண தொகை ரசீது நகல்களையும் தபால் மூலம் இணைக்கவும்.

படி 4: பின்பு, பெயர் திருத்தம் செய்வதற்கு தேவைப்படும் ஆவணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள போன்ற ஆவணங்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

  • குழந்தையின் புகைப்படம்
  • குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்
  • பெற்றோர் புகைப்படம்
  • பெற்றோர் அம்மா அப்பா இருவரின் ஆதார் கார்டு பான் கார்டு வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை
  • ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் விரும்பினால் 750 ரூபாய் செலான் அல்லது தமிழில் பெயர் மாற்ற விரும்பினால் 150 ரூபாய் செலான் இணைக்க வேண்டும்

படி 5: உங்களுக்கு எந்த முகவரில் அனுப்ப வேண்டும் என்று குழப்பம் இருக்கும் அதையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.