Total Post

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது எப்படி ? | How to Link Voter ID with Aadhar Card ?

உங்களின் வாக்காளர் அடையாள அட்டையை வீட்டில் இருந்தவாறே ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டுமா? உங்களின் பதில் ஆம் என்றால், இந்த கட்டுரை உங்களுக்கானது தான். ஆன்லைன் மூலம் Voter ID கார்டை Aadhaar Number உடன் Link செய்வதற்கான முழு செயல்முறையையும் தகுந்த படங்களுடன் உங்களுக்கு விளக்குகிறேன்.

உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டுமா? அப்படி என்றால் இந்த கட்டுரை முழுமையாக படிக்கவும் மேலும் இதில் குறிப்பிட்டுள்ள விவரங்களை படிப்படியாக செயல்முறைப்படுத்தி உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளுங்கள்..

வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண் எதற்காக இணைக்க சொல்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா?
வாக்காளர் அடையாள அட்டை இரண்டு அல்லது பல்வேறு வாக்காளர் அடையாள அட்டை ஒரு சிலர் வைத்திருக்கிறார்கள். அதனால், போலி வாக்காளர் அடையாள அட்டைகளை தடுப்பதற்காக இந்திய அரசு ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு நடைமுறை செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது எப்படி ?

படி 1: முதலில் https://voterportal.eci.gov.in/ தமிழ்நாடு அரசு இணையதளத்தில் உள்நுழைக.

படி 2: நீங்கள் ஏற்கனவே இந்த இணையதளத்தில் கணக்கு வைத்திருந்தால் உங்கள் Username and Password கொடுத்தது Login செய்யவும். ஒருவேளை இந்த இணையதளத்தில் கணக்கு இல்லையென்றால் மேலேகுறிப்பிட்டு உள்ள Create an Account என்பதை கிளிக் செய்யவும்.

படி 3: உங்கள் இமெயில் ( Email ID) அல்லது மொபைல் எண்ணை உள்ளீடு செய்து SENT OTP என்ற பொத்தானை கிளிக் செய்யவும், இப்பொழுது நீங்கள் பதிவு செய்த இமெயில் ஐடி அல்லது மொபைல் எண் இதற்கு OTP எண் வந்திருக்கும் அதை உள்ளீடு செய்த Verify என்பதை கிளிக் செய்யவும.

படி 4: நீங்கள் விரும்பும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்யவும் அதாவது உங்கள் கடவுச்சொல் ஆனது பெரிய எழுத்து, சிறிய எழுத்து, சிறப்பு எண்கள் ஆகியவற்றை கலந்ததாக இருக்க வேண்டும் உதாரணமாக TamilSeva@098. பிறகு Terms of Services என்ற Check Box யை டிக் செய்து Create Account என்ற என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது நீங்கள் Voter Portal கணக்கை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டீர்கள் அதற்கான செய்தி திரையில் தோன்றும்.


படி 5: அதன் பிறகு, புதிய பக்கம் தோன்றும் Your Profile Details, உங்கள் பெயர், மாநிலம் மற்றும் பாலினம் தேர்வு செய்து Submit என்ற பொத்தானை கிளிக் செய்யவும்

தளத்தின் முகப்பு பக்கத்திற்கு செல்ல வேண்டும், அதில் Aadhaar Linkage என்பதை தேர்வு செய்ய வேண்டும். பிறகு, Lets Start என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
voter link with aadhar online in tamil

இப்பொழுது உங்களுக்கு இரண்டு தேர்வுகள் தோன்றும். அதில், இரண்டாவதாக YES I Have Voter ID Number தேர்வு செய்து கிளிக் செய்யவும்

aadhar card voter id link

படி 6: அதன் பிறகு, புதிய பக்கம் தோன்றும், அதில், உங்களிடம் உள்ள வாக்காளர் அடையாள அட்டையில் பத்து இலக்க எண் உள்ளீடு செய்யவும். பின்பு, Fetch Details என்பதை கிளிக் செய்யவும் பின்னர் Proceed என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.

படி 7: பிறகு, உங்களுடைய விவரங்கள் திரையில் தோன்றும் அதை சரி பார்த்து பின்பு Save Continue என்பதை கிளிக் செய்யவும். பின்னர், நீங்கள் பயன்படுத்தும் மொபைல் எண்ணை உள்ளீடு செய்து Sent OTP என்பதை கிளிக் செய்யவும். நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு OTP வந்திருக்கும் அதை உள்ளீடு செய்து Verify என்ற பொத்தானை கிளிக் செய்யவும்

how to link aadhaar with voter id through mobile

படி 7: பிறகு, Details of Person for Form -6B என்ற பக்கம் தோன்றும். அதில் Yes, I Have Aadhaar Number என்பதை டிக் செய்யவும். என்ற பக்கம் தோன்றும் அதில் டிக் செய்யவும். தற்போது உங்கள் ஆதார் எண் உள்ளீடு செய்யவும் பின்பு உங்களுடைய பெயர் சரியாக உள்ளதா என்பதை சரி பார்த்து திருத்தம் செய்து Save Continue என்ற பொத்தானை கிளிக் செய்யவும் .

படி 8: இப்பொழுது Declaration பக்கம் தோன்றும். அதில் தேதி, பெயர் ஆகியவை ஏற்கனவே நிரப்பப்பட்டிருக்கும். Place என்ற இடத்தல் உங்கள் ஊரின் பெயரை
உள்ளீடு செய்து. பிறகு Save Continue தேர்வு செய்து கிளிக் செய்யவும்

படி 9: இறுதியாக, Form 6B இன் முழு படிவம் தோன்றும். அதில் அனைத்து தகவல்களும் நிரப்பப்பட்டிருக்கும். அதை நீங்கள் ஒருமுறை சரிபார்த்துவிட்டு Submit என்பதை கிளிக் செய்யவும்

voter card aadhaar card link last date

இப்பொழுது, Congratulations! You have submitted your application for form-6B in electoral roll என்ற செய்தி தோன்றும். அவ்வளவு தான் நீங்கள் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பிற்கு வெற்றிகரமாக விண்ணப்பித்துவிட்டீர்கள்.