பட்டா என்றால் என்ன ?
பட்டா சான்றிதழ் என்பது நாம் வாங்கிய நிலம் அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்ட உரிமையாளரின் பெயரில் தமிழக அரசால் வழங்கப்பட்ட சட்டப்பூர்வ ஆவணமாகும்.
ஒரு பட்டா பின்வரும் விவரங்களைக் கொண்டுள்ளது:
- பட்டா எண்.
- உரிமையாளரின் பெயர் மற்றும் தந்தை பெயர்.
- சர்வே எண் மற்றும் உட்பிரிவு.
- மாவட்டம், தாலுகா மற்றும் கிராமத்தின் பெயர்.
- நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா என்னும் விவரமும்
- நிலத்தின் பரப்பளவு மற்றும் தீர்வையின் விவரங்கள்.
சிட்டா என்றால் என்ன ?
சிட்டா என்பது பல பட்டாக்களின் தொகுப்பு பதிவேடு இது அரசாங்கப் பதிவேட்டில் ஒருவருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறது என்பதைக் குறிக்கும் பதிவேடுதான் சிட்டா.
இது கிராம நிர்வாக அலுவலர் (VAO) மற்றும் தாலுகா அலுவலகத்தால் பராமரிக்கப்படும் நில வருவாய் ஆவணமாகும்,
சிட்டாவில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண், நஞ்சை (ஈரநிலம்) அல்லது புஞ்சை (வறண்ட நிலம்) என்ற பயன்பாட்டில் இருக்கிறதா என்ற விவரமும், நிலத்திற்கான அளவு தீர்வை விவரமும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
பட்டாவும் சிட்டாவும் ஒன்றா?
ஆம். தமிழக அரசு 2015ல் பட்டா மற்றும் சிட்டா ஆகிய இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது, பட்டா சிட்டா என்ற ஆவணமாக கூறப்படுகிறது. இப்போது, பட்டாவில் நிலத்தின் தொடர்பான அனைத்து விவரங்களும் உள்ளன (மேலே குறிப்பிட்ட உள்ளவாறு).
உட் பிரிவு எப்படி பிரிகிறார்கள்?
நிலத்தின் அளவு 50 செண்ட் என்று வைத்து கொள்ளலாம்( சர்வே எண்/உட்பிரிவு: 110/3A), அவர்களிடமிருந்து 25 செண்ட் நிலத்தை தாங்கள் வாங்குகின்றீர்கள் என்றால்,
நிலத்தின் சர்வே எண் உட்பிரிவு 110/3A1 மற்றும் 110/3A2 என்று இரண்டாக பிரிக்கப்படும்
நிலத்தின் தன்மை:
நிலத்தின் பயன்பாட்டை வைத்து அந்த நிலங்களை பல வகைகளாக பிரிக்கலாம். அதாவது நஞ்சை (ஈரநிலம்), புஞ்சை (வறண்ட நிலம்) , நத்தம் மற்றும் புறம்போக்கு என நிலத்தின் தன்மைகளை பிரிகின்றன.
அடங்கல் என்றால் என்ன?
அடங்கல் என்பது கிராம நிர்வாக (VAO) அலுவலரால் வாழங்கபாடும் நிலப் பதிவேடு ஆகும். அடங்கல் கிராம கணக்கு எண் 2 என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் கிராம நிர்வாக அலுவலரால் எழுதப்படுகிறது. ஆவணங்களில் பின்வரும் விவரங்கள் உள்ளன.
அடங்கலில் விவரங்கள்
அடங்கலில் சொத்தின் சர்வே எண், அளவு, மற்றும் நில வகைப்பாடு போன்ற பல்வேறு முக்கிய விவரங்கள் உள்ளன. மேலும், அடங்கலில் பட்டா சிட்டா ஆவணத்துடன் நில உரிமையாளரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதியாக, ஆவணத்தில் உங்கள் நிலத்தில், நெல், கரும்பு, மரங்கள், கிணறுகள், இப்படி எந்த பயர் வைத்து உள்ளீர்களோ அந்த வகை பெயரை குறிப்பிட்டு இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் அடங்கலில் புள்ளிவிவரங்கள் (அளவு மற்றும் மதிப்பீடு) வகைப்பாடு வாரியாக A பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.