Total Post

பட்டா சிட்டா எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?| How to Download Patta Chitta Online ?

தமிழ்நாட்டில் நிலம்  வாங்கும் போது  உரிமையாளரின் விவரங்களை சரிபார்த்து பின்பு நிலம் வாங்கவும்,

  • பட்டா சிட்டா எண்,
  • நிலத்தின் வரைபடம் (FMB Sketch) மற்றும் அளவு
  • உரிமையாளரின் பெயர்,
  • நிலம் எந்த ஊர் சார்ந்தது,
  • எந்த வகை நிலம் சார்ந்து (நஞ்சை அல்லது புஞ்சை நிலமா)

என்று இணையதள மூலமும் https://eservices.tn.gov.in/ மற்றும் நேரடியகவும் சரிபார்த்துக்கொள்ளவும்,
மனைக்கார் (VAO), தாசில்தார் அலுவலகம் (Tahsildar Office), சார்பதிவாளர் அலுலவகம்
(Register Office),வில்லங்கச் சான்று விவரம் (EC) சரிபார்த்து பின்பு அந்த
நிலத்தை வாங்கவும்.

பட்டா சிட்டா எவ்வாறு பெறுவது போன்ற பல கேள்விகள் உங்களிடம் இருக்கலாம்?
ஆன்லைனில் பட்டா சிட்டா விவரங்களை எவ்வாறு சரிபார்க்கலாம்? உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் இங்கே கிடைக்கும்.

பட்டா சிட்டா ஆன்லைனில் எப்படி பதிவிறக்கம் செய்வது?

படி 1:  முதலில் https://eservices.tn.gov.in/   தமிழ்நாடு பட்டா சிட்டா இணையதளத்தில் உள்நுழைக.

படி 2:  இணையதளத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் கிடைக்கிறது,இதில் ஏதாவது ஒன்று தேர்வுசெய்யவும்.

படி 3:  பட்டா / சிட்டா விவரங்களை பார்வையிட  என்பதை (கிளிக் செய்யவும்) தேர்ந்தெடுக்கவும்.

Patta Chitta Download

படி 4: கீழ்தோன்றும் மெனுவிலிருந்து மாவட்டம் , வட்டம், கிராமம் தேர்ந்தெடுக்கவும். பின்பு, பட்டா எண் அல்லது புல எண், உட்பிரிவு எண் அல்லது பெயர் வாரியான தேடல்,  ஏதாவது ஒன்றை தேர்வு செய்து உங்கள் பட்டா எண் அல்லது புல எண் உட்பிரிவு எண் உள்ளிடவும்,

அங்கீகார மதிப்பை  (CAPTCHA) உள்ளிடவும்  மற்றும் சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும, கடைசியாக சமர்ப்பி என்பதை கிளிக் செய்யவும்

Patta Chitta Free Download

படி 5:  பட்டா சிட்டா விவரங்கள் உங்கள் பக்கத்தில் தோன்றும், பட்டா சிட்டா சரிபார்த்து கொள்ளவும்

Examlpes Patta Chitta View