Total Post

வேலையின்மை சான்றிதழ்-UnEmployment Certificate விண்ணப்பம் செய்வது பெறுவது எப்படி?

தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத (REV-108 Unemployment Certificate) இளைஞர்களுக்காக அரசாங்க துறையிடமிருந்து சில உதவி தொகையைப் பெறுவதற்காகவும் வேலையின்மை சான்றிதழ் அரசாங்கத்தில் இருந்து வழங்கப்படுகிறது. வேலையின்மை சான்றிதழ் பெற்றுக் கொள்ளவதற்கு ஆன்லைன் மூலமே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் இருக்கும் இடத்தில் இருந்தே பல வகையான சேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். வேலையின்மை சான்றிதழ் பெற்றுக் கொள்ளவதற்கு ரூ.60 மட்டுமே கட்டணமாக செலுத்த வேண்டும்.

வேலையின்மை சான்றிதழ் -(Unemployment Certificate) தேவைப்படும் ஆவணங்கள்:-

1.Photo (விண்ணப்பதாரரின் புகைப்படம்)

2.Smart Card and Aadhar card (குடும்ப அட்டை, ஆதார் அட்டை)

3.Educational Qualification (கல்வித் தகுதிச் சான்று)

4.Transfer Certificate (கல்வி இடமாற்றச் சான்றிதழ்)

5.Income Certificate (குடும்ப வருமானச் சான்றிதழ்)

6.Employment Card ( வேலைவாய்ப்பு அட்டை)

unemployment form apply online in tamil

வேலையின்மை சான்றிதழ் -(Unemployment Certificate) சான்றிதழ் விண்ணப்பம் செய்வது பெறுவது எப்படி?

படி 1: https://www.tnesevai.tn.gov.in TNeGA என்ற இணையதளத்தில் உள்நுழைக.

படி 2: குடிமகன் உள்நுழை பொத்தானைக் கிளிக் செய்து பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். பின்னர், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, உள்நுழை பொத்தானைக் கிளிக் செய்யவும்.

படி 3: புதிய பக்கம் தோன்றும். அதில், Department Wise → Revenue Department → REV-108 Unemployment Certificate என்பதை தேர்ந்தெடுத்து கிளிக் செய்யவும் .

படி 4: Process பொத்தானைக் கிளிக் செய்யவும். நீங்கள் ஏற்கனவே CAN பதிவு செய்திருந்தால், உங்கள் விவரங்கள் CAN எண், பெயர், கைபேசி எண், ஆதார் எண் இதில் ஏதாவது ஒன்றுஉள்ளீடு செய்து Search என்பதை கிளிக் செய்யவும் .

படி 5: Generate OTP என்பதை கிளிக் செய்து மொபைல் எண்ணுக்கு வரும் OTP யை உள்ளிடவும் Confirm என்பதை கிளிக் செய்யவும். பிறகு, Proceed என்பதை என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.

படி 6: நீங்கள் CAN Register செய்யும் பொழுது நீங்கள் கொடுத்த அனைத்து விபரங்களும் தோன்றும். தோன்றும் விபரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை ஒருமுறை சரிபார்த்த பினனர் Submit கிளிக் செய்ய வேண்டும்.

புதிய பக்கம் தோன்றும். அதில், கீழேகொடுக்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்யவும்:

unemployment certificate tamilnadu

Education Details:

  • Have completed your Graduation? ( Choose Yes or No)
  • School/College Name
  • Year of Completion
  • Highest Educational Qualification
  • Affiliated Board / University

Other Details:

  • Unemployment from date
  • Unemployment to date

பிறகு, Submit பொத்தானை கிளிக் செய்யவும்.

படி 7: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணத்தின் நகலை ஸ்கேன் காப்பிய யாக SCAN COPY பதிவேற்றம் (Upload) செய்யவும்
1.Photo
2.Any Address Proof (Aadhar and Ration Card)
3.Educational Qualification Proof
4.Transfer Certificate
5.Family Income Certificate
6.Employment Card
7.Other Documents(பிற ஆவணங்கள்)
8.Self-Declaration of Applicant Mandatory (விண்ணப்பதாரரின் சுய அறிவிப்பு கட்டாயம்) Form-ஐ தரவிறக்கம் செய்து அதில் உங்களுடைய கையொப்பம் இட்ட பிறகு, அதலை Scan செய்து Upload செய்ய வேண்டும்.

unemployment certificate download

படி 8: அனைத்து விவரங்களையும் பதிவு செய்த பின்னர் Make Payment பட்டனை கிளிக் செய்து ரூ.60 கட்டணம் செலுத்த வேண்டும்.

படி 9: கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் இருந்து உங்களுடைய விண்ணப்பம் சரிபார்த்த பின்பு. உங்கள் தொலைபேசி எண்ணிற்கு தகவல் வந்து சேரும், அதன்பின் TNeGA Login செய்து வேலையின்மை சான்றிதழ் (Unemployment Certificate) தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.