Total Post

கணவனால் கைவிடப்பட்ட பெண் சான்றிதழ் விண்ணப்பம் செய்வது எப்படி? | How To Apply Deserted Woman Certificate?

தமிழகத்தில் கணவனால் கைவிடப்பட்ட பெண் சான்றிதழ் (REV-105 Deserted Woman Certificate) இச்சான்றுகள் வைத்து அரசாங்கத்திலிருந்து பென்சில் சலுகையைப் பெறலாம். ஆதரவு இல்லாத கைவிடப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்திற்காக,கணவனால் கைவிடப்பட்ட பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

கணவர் (இருவார தினங்களில் மேல் எங்கு தேடியும் கிடைக்க வில்லை என்றால்) காணாமல் போனதைப் பற்றி காவல் நிலையத்தில் புகார் செய்து அதன் FIR நகலை பெற வேண்டும். குறைந்தது ஏழு வருடங்கள் காணாமல் போயிருக்க வேண்டும் என்றால் தான் கணவரால் கைவிடப்பட்ட சான்றிதழ் பதிவு செய்ய விண்ணப்பிக்க முடியும்.

கணவனால் கைவிடப்பட்ட பெண் சான்றிதழ் (Deserted Woman Certificate) தேவைப்படும் ஆவணங்கள்:-

1.Photo (விண்ணப்பதாரரின் புகைப்படம்)

2.Smart Card and Aadhar card (குடும்ப அட்டை, ஆதார் அட்டை)

3.Proof of Residence ( இருப்பிட சான்று)

4.Proof of Marriage

5.Proof of Desertion or FIR Details (போலீஸ் புகார் FIR நகல்)

கணவனால் கைவிடப்பட்ட பெண் சான்றிதழ் -(Deserted Woman Certificate) விண்ணப்பம் செய்வது எப்படி?

படி 1: https://www.tnesevai.tn.gov.in TNeGA என்ற இணையதளத்தில் செல்லவும்.

படி 2: குடிமகன் உள்நுழை பொத்தானைக் கிளிக் செய்து பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். பின்னர், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, உள்நுழை பொத்தானைக் கிளிக் செய்யவும்.

படி 3: Department Wise → Revenue Department → REV-105 Deserted Woman Certificate என்பதை தேர்ந்தெடுத்து கிளிக் செய்யவும் .

rev-105 deserted woman certificate online in tamil

படி 4: Process கிளிக் செய்யவும், ஏற்கனவே CAN பதிவு செய்திருந்தால் உங்கள் விவரங்கள் CAN எண், கைபேசி எண், ஆதார் எண்கள் இதில் ஏதாவது ஒன்றுஉள்ளீடு செய்து Search என்பதை கிளிக் செய்யவும் .

படி 5: Generate OTP என்பதை கிளிக் செய்து மொபைல் எண்ணுக்கு வரும் OTP யை உள்ளிடவும் Confirm என்பதை கிளிக் செய்யவும். பிறகு, Proceed என்பதை என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.

படி 6: நீங்கள் CAN Register செய்யும் பொழுது நீங்கள் கொடுத்த அனைத்து விபரங்களும் தோன்றும். தோன்றும் விபரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை ஒருமுறை சரிபார்த்த பினனர் Submit கிளிக் செய்ய வேண்டும்.
புதிய பக்கம் தோன்றும். அதில், கீழேகொடுக்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்யவும். பிறகு, Submit பொத்தானை கிளிக் செய்யவும்.

படி 7: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணத்தின் நகலை ஸ்கேன் காப்பிய யாக SCAN COPY பதிவேற்றம் (Upload) செய்யவும்
1.Photo
2.Any Address Proof (Aadhar and Ration Card)
3.Proof of Residence
4.Proof of Marriage
5.Proof of Desertion or FIR Details
6.Other Documents(பிற ஆவணங்கள்)
7.Self-Declaration of Applicant Mandatory (விண்ணப்பதாரரின் சுய அறிவிப்பு கட்டாயம்) Form-ஐ தரவிறக்கம் செய்து அதில் உங்களுடைய கையொப்பம் இட்ட பிறகு, அதலை Scan செய்து Upload செய்ய வேண்டும்.

படி 8: அனைத்து விவரங்களையும் பதிவு செய்த பின்னர் Make Payment பட்டனை கிளிக் செய்து ரூ.60 கட்டணம் செலுத்த வேண்டும்.

படி 9: அலுவலகத்தில் இருந்து உங்களுடைய விண்ணப்பம் சரிபார்த்த பின்பு. பதிவு செய்த தொலைபேசி எண்ணிற்கு தகவல் வந்து சேரும், அதன்பின் TNeGA Login செய்துகணவனால் கைவிடப்பட்ட பெண் சான்றிதழ் (Deserted Woman Certificate) தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.