Total Post

திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ் விண்ணப்பம் செய்வது எப்படி? | Unmarried Certificate Apply Online in Tamilnadu?

ஒருவருக்கு குறிப்பிட்ட வயதிற்கு மேல் திருமணம் ஆகவில்லை என்றாலும் அல்லது திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்று தீர்மானித்து இருந்தாலும். இணையதளம் மூலம் அவர்கள் திருமணம் ஆகவில்லை என்று சான்றிதழ் (Unmarried Certificate REV-120) விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.இந்தச் சான்று விண்ணப்பிக்கும் மூலம் அரசாங்கத்திலிருந்து சில சலுகைகளை பெறலாம்.

திருமணம் ஆகவில்லை என்று சான்று உண்மையாக இருக்கும் பட்சத்தில் உங்கள் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் நேரில் வந்து சரிபார்த்தபின் பின்பு மற்றும் வட்டாட்சியர் சரி பார்த்து உங்கள் மனுவை சரியாக இருக்கும் வகையில் இந்தச் சான்று வழங்கப்படும்.


திருமணம் ஆகவில்லை-(Unmarried Certificate) தேவைப்படும் ஆவணங்கள்:-

unmarried certificate apply online tamilnadu

1. விண்ணப்பதாரரின் புகைப்படம்.
2. குடியிருப்பு சான்று (ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு).
3. பிறந்த தேதிக்கான சான்று (மதிப்பபண் சான்றிதழ்/பள்ளி மாற்று சான்றிதழ்)
4. விண்ணப்பதாரரின் சுய அறிவிப்பு (Self-Declaration of Applicant)

திருமணம் ஆகவில்லை-(Unmarried Certificate) சான்றிதழ் விண்ணப்பம் செய்வது எப்படி?

படி 1: TNeGA https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் செல்லவும்.

படி 2: குடிமகன் உள்நுழை பொத்தானைக் கிளிக் செய்து பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். பின்னர், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, உள்நுழை பொத்தானைக் கிளிக் செய்யவும்.

படி 3: புதிய பக்கம் தோன்றும். அதில், Department Wise → Revenue Department → REV-120 Unmarried Certificate என்பதை தேர்ந்தெடுத்து கிளிக் செய்யவும் .

படி 4: Process பொத்தானைக் கிளிக் செய்யவும். நீங்கள் ஏற்கனவே CAN பதிவு செய்திருந்தால், உங்கள் விவரங்கள் CAN எண், பெயர், தந்தையின் பெயர், பிறந்த தேதி, கைபேசி எண்,, ஆதார் எண்கள் இதில் ஏதாவது ஒன்றுஉள்ளீடு செய்து Search என்பதை கிளிக் செய்யவும் .

படி 5: Generate OTP என்பதை கிளிக் செய்து மொபைல் எண்ணுக்கு வரும் OTP யை உள்ளிடவும் Confirm என்பதை கிளிக் செய்யவும். பிறகு, Proceed என்பதை என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.

படி 6: புதிய பக்கம் தோன்றும். அதில், நீங்கள் CAN Register செய்யும் பொழுது நீங்கள் கொடுத்த அனைத்து விபரங்களும் தோன்றும். தோன்றும் விபரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை ஒருமுறை சரிபார்த்த பினனர் Submit கிளிக் செய்ய வேண்டும்.

படி 7: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணத்தின் நகலை ஸ்கேன் காப்பிய யாக SCAN COPY பதிவேற்றம் (Upload) செய்யவும்
1.Photo
2.Any Address Proof (Aadhar and Ration Card)
3.Age Proof
4.Self-Declaration of Applicant Mandatory (விண்ணப்பதாரரின் சுய அறிவிப்பு கட்டாயம்) Form-ஐ தரவிறக்கம் செய்து அதில் உங்களுடைய கையொப்பம் இட்ட பிறகு, அதலை Scan செய்து Upload செய்ய வேண்டும்.
5.Other documents (பிற ஆவணங்கள்)

படி 8: அனைத்து சான்றிதழ்களையும் பதிவு செய்த பின்னர் Make Payment பட்டனை கிளிக் செய்து ரூ.60 கட்டணம் செலுத்த வேண்டும்.

படி 9: கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து உங்களுடைய விண்ணப்பம் சரிபார்த்த பின்பு. பதிவு செய்த தொலைபேசி எண்ணிற்கு தகவல் வந்து சேரும், அதன்பின் TNeGA Login செய்து திருமணம் ஆகவில்லை என்பதற்கான சான்றிதழ் (Unmarried Certificate) தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.