Total Post

ஆண் குழந்தை இல்லை என்று சான்றிதழ் பெற விண்ணப்பம் செய்வது எப்படி? | No Male Child Certificate apply online in Tamil

ஆண் குழந்தை இல்லை என்ற சான்றிதழ் என்பது ஒருவருக்கு திருமணம் ஆகிய பின்பு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்காமல் இருந்திருந்தால் இந்த சான்றிதழை விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெண் குழந்தை பிறந்திருந்தாலும் இந்த ஆண் குழந்தை இல்லை என்ற சான்றிதழ் விண்ணப்பிக்கலாம்.

இந்தச் சான்று விண்ணப்பிக்கும் மூலம் அரசாங்கத்திலிருந்து சில சலுகைகளை பெறலாம் மேலும் இந்தச் சான்று கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்டாட்சியர் சரி பார்த்து பின்பு நாம் விண்ணப்பம் செய்த விண்ணப்பம் சரியாக இருக்கும் வகையில் இந்தச் சான்று வழங்கப்படும்

No Male Child Certificate ஆண் குழந்தை இல்லை சான்றிதழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:

திருமணம் ஆனவர்கள் ஆண் குழந்தை பிறக்காமல் இருந்திருந்தால் இந்த சான்றிதழை விண்ணப்பித்துக் கொள்ளலாம்

சிறு குறு விவசாயி -(No Male Child Certificate) சான்றிதழ் அப்ளை செய்ய தேவைப்படும் ஆவணங்கள்:-

1. பெற்றோரின் ஒருங்கிணைந்த புகைப்படம்
2. குடியிருப்பு சான்று
3. பெற்றோரின் ஸ்டெரிலைசேஷன் சான்றிதழ்
4. முதல் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்
5. இரண்டாவது குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்
6. மூன்றாவது குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்
7. ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு
8. விண்ணப்பதாரரின் சுய அறிவிப்பு (Self-Declaration of Applicant)

no male child certificate in tamilnadu

ஆண் குழந்தை இல்லை No Male Child Certificate சான்றிதழ் விண்ணப்பம் செய்வது எப்படி?

படி 1: TNeGA https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் செல்லவும்.

படி 2: குடிமகன் உள்நுழை பொத்தானைக் கிளிக் செய்து பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். பின்னர், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, உள்நுழை பொத்தானைக் கிளிக் செய்யவும்.

படி 3: புதிய பக்கம் தோன்றும். அதில், DEPARTMENT WISE விருப்பத்தை கிளிக் செய்யவும். பிறகு, Revenue Department கிளிக் செய்யவும். பிறகு, REV-119 No Male Child Certificate என்பதை தேர்ந்தெடுத்து கிளிக் செய்யவும் .

படி 4: Process பொத்தானைக் கிளிக் செய்யவும். நீங்கள் ஏற்கனவே CAN பதிவு செய்திருந்தால், உங்கள் விவரங்கள் CAN எண், பெயர், தந்தையின் பெயர், பிறந்த தேதி, கைபேசி எண்,, ஆதார் எண்கள் இதில் ஏதாவது ஒன்றுஉள்ளீடு செய்து Search என்பதை கிளிக் செய்யவும் .

படி 5: Generate OTP என்பதை கிளிக் செய்து மொபைல் எண்ணுக்கு வரும் OTP யை உள்ளிடவும் Confirm என்பதை கிளிக் செய்யவும். பிறகு, Proceed என்பதை என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.

படி 6: புதிய பக்கம் தோன்றும். அதில்:

Applicant Detail

  • Father Name தந்தை பெயர்
  • Mother Name தாயின் பெயர் என்ற விவரங்களை பூர்த்தி செய்யவும்.

Add Child Details

  • Child Name குழந்தையின் பெயர்
  • DOB of child

உங்களோட குழந்தை பெயர் மற்றும் பிறந்த தேதி உள்ளீடு செய்து ADD என்பதை கிளிக் செய்து சேர்க்கவும். இதே போல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் இருந்தால் இதே போன்று மொத்த குயந்தை விவரங்களை பூர்த்தி ADD செய்த்து செய்யவும்

  • Who has undergone sterilization? கருத்தடை செய்தவர் ?
    Father or Mother என்பதை தேர்வு செய்யவும்.

rev-119 no male child certificate download tamilnadu

போன்ற எல்லாம் சரியான விவரங்களை பூர்த்தி செய்து Submit பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

படி 7: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணத்தின் நகலை ஸ்கேன் காப்பிய யாக SCAN COPY பதிவேற்றம் (Upload) செய்யவும்
1. Combined Photo of Parents (பெற்றோரின் ஒருங்கிணைந்த புகைப்படம்)
2. Residence Proof ( வசிப்பிடச் சான்று)
3. Sterilization Certificate of Parents
4. Birth certificate of First Children முதல் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்
5. Family or Smart Card
6. Self-Declaration of Applicant Mandatory (விண்ணப்பதாரரின் சுய அறிவிப்பு கட்டாயம்)
7. Other documents (பிற ஆவணங்கள்)

two female child scheme in tamilnadu application form tamil

படி 8: இறுதியாக, Make a Payment என்பதை கிளிக் செய்து ரூ:60 இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். பின்பு, நீங்கள் விண்ணப்பம் செய்யப்பட்ட ஒப்புகை சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.