விவசாயிகளுக்கு மத்திய அரசின் பல்வேறு திட்டங்களைப் செயல்முறைப்பட்டு வருகிறது. இதில் ஒன்று சிறு குறு விவசாயி சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு சொட்டு நீர் பாசனம் ஆழ்துளை கிணறு தெளிப்பு நீர் பாசனம் போன்றவற்றை இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் தோட்டக்கலை சார்ந்தவர்களுக்கு யூரியா பொட்டாசியம் மற்றும் விதைகளை மானியம் மூலம் வழங்கப்படுகிறது.
Small Marginal Farmer Certificate சிறு குறு விவசாயி சான்றிதழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:
- சிறு குறு விவசாயி சான்றிதழ் அப்பாலை செய்ய விரும்பும் விவசாயிகள் ஐந்து ஏக்கர் குள்ளாக இருக்க வேண்டும். ஐந்து ஏக்கர் மேல் இருந்தால் சிறு குறு விவசாயி சான்றிதழ் விண்ணப்பம் செய்ய தகுதியற்றவர்.
- நிலம் மற்றும் பட்டா சிட்டா யாருடைய பெயரில் உள்ளதோ அவர்களுடைய பெயரில் மட்டுமே இந்த சிறு குறு விவசாயி சான்றிதழை விண்ணப்பம் செய்யமுடியும். ஒருவேளை நிலத்தின் உரிமையாளர் இறந்துவிட்டால் அவருடைய மனைவி அல்லது பிள்ளைகள் பெயரில் சிறு குறு விவசாயி சான்றிதழ் அப்ளை செய்து பெற்றுக்கொள்ள முடியும். இருப்பினும் அவருடைய இறப்பு சான்றிதழை விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும்.
- உங்களுடைய நிலம் கூட்டு பட்டாவாக இருக்கிறது என்றால் கிராம நிர்வாகி அலுவலர் (VAO) விடம் தங்களுக்கு எவ்வளவு இடம் இருக்கிறது என்று அடங்கல் சான்றிதழ் பெற்று இணைக்க வேண்டும்..
- உங்களிடம் எத்தனை சர்வே நம்பர் வைத்திருந்தாலும் அவற்றை அனைத்தையும் ஒன்றாக Add செய்துகொள்ளலாம்.
- தாங்கள் கூட்டு பட்டாவாக வைத்திருந்தாலும் கண்டிப்பாக வில்லங்கம் சான்று (EC) அல்லது பத்திரம் நகல் இவை இரண்டில் எதாவது ஒன்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
சிறு குறு விவசாயி -(Small Marginal Farmer) சான்றிதழ் அப்ளை செய்ய தேவைப்படும் ஆவணங்கள்:-
1. விண்ணப்பதாரர் புகைப்படம்
2. விண்ணப்பதாரர் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு.
3. பாத்திரத்தின் நகல் (Sale Deeds)
4. அடங்கல் சான்றிதழ் (Adangal)
5.வில்லங்கம் சான்று (EC-Encumbrance)
6. விண்ணப்பதாரரின் சுய அறிவிப்பு (Self-Declaration of Applicant)
7. பிற ஆவணங்கள்
சிறு குறு விவசாயி Small Marginal சான்றிதழ் விண்ணப்பம் செய்வது எப்படி?
படி 1: TNeGA eSevai https://www.tnesevai.tn.gov.in என்ற இணைப்பைப் பயன்படுத்தி இணையதளத்தில் செல்லவும்.
படி 2: குடிமகன் உள்நுழை பொத்தானைக் கிளிக் செய்து சரியான உள்நுழைவு பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். பின்னர், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, உள்நுழை பொத்தானைக் கிளிக் செய்யவும்.
படி 3: DEPARTMENT WISE விருப்பத்தை கிளிக் செய்யவும். பிறகு, Revenue Department கிளிக் செய்யவும். பிறகு, REV-117 Small / Marginal Farmer Certificate என்பதை தேர்ந்தெடுத்து கிளிக் செய்யவும் .
படி 4: புதிய பக்கம் தோன்றும். அதில், Procees பொத்தானைக் கிளிக் செய்யவும். நீங்கள் ஏற்கனவே CAN பதிவு செய்திருந்தால், உங்கள் விவரங்கள் CAN எண், பெயர், தந்தையின் பெயர், பிறந்த தேதி, கைபேசி எண்,, ஆதார் எண்கள் இதில் ஏதாவது ஒன்றுஉள்ளீடு செய்து Search என்பதை கிளிக் செய்யவும் .
படி 5: Generate OTP என்பதை கிளிக் செய்து மொபைல் எண்ணுக்கு வரும் OTP யை உள்ளிடவும் Confim என்பதை கிளிக் செய்யவும். பிறகு, Proceed என்பதை என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
படி 6: புதிய பக்கம் தோன்றும். அதில் இறுதி பக்கத்தில் Land Details:
- District மாவட்டம்
- Taluk வட்டம்
- Revenue Village கிராமம்*
- Land Type
- Survey No
- Patta No
- Land Area (in Hectares)*
- Land Area (in Acres)
- Value (Rs.)*
- Share Percentage*
- Remarks
போன்ற விவரங்களை தேர்தெடுத்து மற்றும் உள்ளீடு செய்து Add என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்,மேலும் சர்வே எண் இருந்தால் இதே போன்று உங்கள் நிலத்தில் சர்வே எண் விவரங்களை பூர்த்தி செய்து Add என்பதை கிளிக் செய்யவேண்டும்.
படி 7: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணத்தின் நகலை SCAN COPY பதிவேற்றம் செய்யவும்
1.Photo
2.Chitta
4.Adangal
5.Encumbrance
6.Any Address Proof
7.Sale Deeds
8.Other Documents
படி 8: இறுதியாக, Make a Payment என்பதை கிளிக் செய்து ரூ:60 இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். பின்பு, நீங்கள் விண்ணப்பம் செய்யப்பட்ட ஒப்புகை சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.