Total Post

TNeGA (CSC) உள்நுழைவது புதிய பயனர் பதிவு செய்தல் எப்படி? | TNeGA How to Register,Login and CAN Register ?

தமிழ் சேவை இணையதளத்தின் மூலம் உங்களோட சில சம்மந்தபட்ட சான்றிதழை விண்ணப்பிக்க முடியும் மற்றும் சான்றிதழை பதிவிறக்கம் செய்யவும் முடியும்,மேலும் விண்ணப்பம் செய்தல் மற்றும் பதிவிறக்கம் செய்தல் போன்ற பல்வேறு கேள்விகளுக்கு இந்த இணையத்தில் வழிமுறையாகவும், பதில்கள் கிடைக்கும்.

TNeGA (CSC) இல் உள்நுழைவது எப்படி?

படி 1: முதலில் தமிழ்நாடு அரசு இணையதளத்தில் https://www.tnesevai.tn.gov.in உள்நுழைக.
படி 2: பயனாளர் உள்நுழைக (Citizen Login) என்பதை (கிளிக் செய்யவும்) தேர்ந்தெடுக்கவும்.
படி 3: புதிய பக்கம் தோன்றும். அதில், பதிவு செய்யப்பட்ட உங்கள் Username and Password உள்ளீடு செய்து பின் கேப்ட்சா(Captcha) குறியீடு உள்ளீடு செய்து Login என்பதை கிளிக் செய்த உடன் புதிய முகப்பு பக்கம் தோன்றும் அதில் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளலாம்.

அல்லது (OR)

படி 3: நிங்கள் உங்களோட பயனர் ID, பஸ்வ்ரோட மறந்து இருந்தால் உங்களோட மொபைல் நம்பர் வைத்து உள்நுழை முடியும்.

  • Login With Mobile Number என்பதை (கிளிக் செய்யவும்) தேர்ந்தெடுக்கவும்.
  • புதிய பக்கம் தோன்றும். அதில், பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணை உள்ளீடு செய்து Generate OTP என்பதை கிளிக் செய்யவும்.
  • நீங்கள் உள்ளீடு செய்த மொபைல் எண்ணுக்கு வந்த OTP என்னை உள்ளீடு செய்து Verify OTP என்பதை கிளிக் செய்து விண்ணப்பம் முகப்பு பக்கத்திற்கு உள்நுழையலாம்.

TNeGA (CSC) இல் புதிய பயனர் ( New Citizen Account) புதிய பதிவு செய்தல் எப்படி?

படி 1: https://www.tnesevai.tn.gov.in தமிழ்நாடு அரசு இணையதளத்தில் உள்நுழைக.

படி 2: பயனாளர் உள்நுழைக (Citizen Login) என்பதை கிளிக் செய்யவும்.

படி 3: புதிய பக்கம் தோன்றும். அதில், New User? SignUp here என்பதை கிளிக் செய்யவும்.

படி 3: புதிய பக்கம் தோன்றும். அதில், முழு பெயர் (Full Name ), District, Taluk, கைபேசி எண் (Mobile Number), மின்னஞ்சல் முகவரி (Email Id), ஆதார் எண் ( Aadhar No) உங்களோட விவரங்களை சரியாக உள்ளிடவும்.

படி 4: நிங்கள் விரும்பும் உள்நுழை ஐடி (Login Id ), கடவுச்சொல் (Password), கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக (Confirm Password), கேப்ட்சா குறியீடு உள்ளீடு செய்து SignUp என்பதை கிளிக் செய்து புதிய பயனர் ( New Citizen Account) பதிவு செய்து கொள்ளலாம்.

TNeGA (CSC) கேன்_(CAN) பதிவு செய்தல் எப்படி?

படி 1: தமிழ்நாடு அரசு மக்களுக்காக உருவாக்கப்பட்ட இணையதளத்தில் https://www.tnesevai.tn.gov.in உள்நுழைக

படி 2: அதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பயனர் உள்நுழைவு என்பதை கிளிக் செய்து உங்கள் யூசர் ஐடி, பாஸ்வேர்டு-(Username Password) கொடுத்து Login பொத்தானை கிளிக் செய்யவும்.

படி 3: அடுத்து வரும் பக்கத்தில் டிபார்ட்மென்ட்-(Department) என்பதை தேர்வு செய்யவும் அதில் நீங்கள் நேட்டிவ் சர்டிபிகேட்-(Native Certificate) பதிவு செய்கிறீர்கள் என்றால் அதை கிளிக் செய்யவும்.

படி 4: புதிய பக்கம் தோன்றும் அதில் புரோசெஸ்-(Process) என்பதை கிளிக் செய்யவும். பிறகு, நீங்கள் கேன்-(CAN) ரிஜிஸ்டர் செய்யாமல் இருந்திருந்தால் ரிஜிஸ்டர் கேன-(Register CAN) என்பதை கிளிக் செய்யவும்.

படி 5: அதில் ஆதார் எண், உங்களுடைய பெயர், பிறந்த தேதி, மதம், ஜாதி , கல்வித்தகுதி மற்றும் நீங்கள் வசிக்கும் இடத்தின் முகவரியை உள்ளிட வேண்டும்.

படி 6: உங்கள் தொலைபேசி எண்-(Mobile Number) பதிவு செய்து ஜெனரேட் ஓடிபி-(Generate OTP) என்பதை கிளிக் செய்து நீங்கள் பதிவு செய்த எனக்கு வரும் ஓட்டி பி-(OTP) யை உள்ளிட வேண்டும். பின்பு, உங்களிடம் மின்னஞ்சல் இருந்தால் பதிவு செய்யவும். இறுதியாக ரிஜிஸ்டர்-(Register) என்ற பொத்தானை கிளிக் செய்து கேன்-(CAN) பதிவு செய்து கொள்ளலாம்.