Total Post

பட்டா பெயரை ஆன்லைனில் மாற்றுவது எப்படி? | How to apply Patta Transfer online ?

ஒருவரிடம் நாம் நிலம் வாங்கும் போது, அந்த நிலத்தை சர்ப்பதிவாளர் மூலம் பத்திரப்பதிவு செய்யும் போதே பட்டா மறுதலுக்கான கட்டணம் செலுத்தி இருப்போம். எனவே,
தாலுகா அலுவலத்தில் பத்திரப்பதிவு மற்றும் பட்டா மறுதலுக்கான விண்ணப்பம் சென்றடையும், அவர்கள் 15 To 30 நாட்களில் பட்டா மாறுதல் செய்து தர வேண்டும். 30 நாட்களில் பட்டா மாறாமல் இருந்தால் நேரில் சென்று சம்மந்தபட்ட அலுவலரை கேட்கவும்.

பத்திராபதிவின் போது பட்டா மறுதலுக்கான விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்தாமல் இருந்தால், அருகில் உள்ள இணைய சேவை (E-Sevai CSC) மையத்திற்கு சென்று பட்டா மறுதலுக்கான விண்ணப்பம் விண்ணப்பிக்கலாம். அதற்கு தேவைப்படும் ஆவணம்,

  • சார்பதிவாளர் மூலம் பதிவு செய்த பத்திரம்
  • ஆதார் கார்டு
  • ரேஷன் கார்டு
  • வில்லங்கம் சன்றிதாழ் (EC)

பட்டா மாறுதலுக்காக விண்ணப்பம் செய்த பின். அதற்கான ஒப்புகை சீட்டு தருவார்கள். அதை சம்மந்தப்பட்ட அலுவலருக்கு நேரில் சென்றோ அல்லது பதிவு தபால் மூலமோ நினைவுடல்ககா அனுபலம். அதற்கு தேவைப்படும் ஆவணம்,

  • விண்ணப்பம் செய்த ஒப்புகை சீட்டு
  • பத்திரம் நகல்
  • ஆதார் கார்டு நகல்
  • ரேஷன் கார்டு நகல்
  • வில்லங்கம் சன்றிதாழ் (EC)

பட்டா மாறுதல் எவ்வாறு நடைபெறுகிறது?

நாம் சர்ப்பதிவாளர் மூலம் பதிவு செய்த பின் சம்மந்த பட்டா அலுவலருக்கு பட்டா மறுதலுக்கான விண்ணப்பம் இணைய வழியாக சென்றடையும்.
இந்த மாறுதல் இரண்டு வகையாக பிரிக்கிறார்கள்.

  1. உட்பிரிவு செய்தல்
  2. உட்பிரிவு செய்யாமல் பட்டா மாற்றம் செய்தல்

1.உட் பிரிவு எப்படி பிரிகிறார்கள்?

நில அளவு 80 செண்ட் என்று வைத்து கொள்ளலாம்( சர்வே எண்/உட்பிரிவு: 82/6A), 40 செண்ட் நிலத்தை வாங்குகிர்கள் என்றால்,
நிலத்தின் சர்வே எண் உட்பிரிவு 82/6A1 மற்றும் 82/6A2 என்று இரண்டாக பிரிக்கப்படும், இதில் உள்ள சர்வே எண் உட்பிரிவு ஒன்று தங்களுக்கு பட்டா மாறுதல் செய்து தரப்படும்.

நீங்கள் உட்பிரிவு செய்கிறீர்கள் என்றால் சர்வேயர்-க்கு(Surveyor) உங்கள் மானு விண்ணப்பம் இணைய வழியாக சென்றடையும், 30 நாட்களுக்குள் உங்கள் நிலத்திற்கு வந்து நிலத்தை ஒரு முறை அளந்து பின்பு. உங்கள் பட்டா மறுதலுக்கான மனுவை செயல்முறை படுத்துவார்கள். சர்வேயர் (Surveyor) செயல்முறை செய்த ஆவணத்தை ஒரு முறை தாசில்தார் அலுவலர் சரிபார்த்து பின்பு உங்களுக்கு பட்டா மாற்றம் செய்து தருவார்கள்.

2.உட்பிரிவு செய்யாமல் பட்டா மாற்றம் செய்தல்?

நில அளவு 20 செண்ட் ( சர்வே எண்/உட்பிரிவு: 81/5A),இதில் 20 செண்ட்யும் வாங்குகிர்கள் என்றால் ,உங்களுக்கு அதே சர்வே எண் உட்பிரிவு தங்களுக்கு பட்டா மாறுதல் செய்து தரப்படும்.

உட்பிரிவு இல்லாமல் பட்டா மாற்றம் செய்தல் உங்கள் மானு விண்ணப்பம் கிராம நிர்வாகி அலுவலர்-க்கு (VAO) இணைய வழியாக சென்றடையும், 15 நாட்களுக்குள் உங்கள் பட்டா மறுதலுக்கான மனுவை செயல்முறை படுத்துவார்கள் கிராம நிர்வாகி அலுவலர்-க்கு (VAO). பின்பு, வட்ட வழங்கல் அதிகாரி ஒரு முறை சரிபார்த்து பின்பு உங்களுக்கு பட்டா மாற்றம் செய்து தருவார்கள்.

பட்டா மாறுதல் விண்ணப்பத்தின் நிலை சரிபார்ப்பது எப்படி?

படி 1: தமிழ்நாடு அரசு https://eservices.tn.gov.in/ இணையதளத்தில் உள்நுழைக.
படி 2: இணையதளத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் கிடைக்கிறது,இதில் ஏதாவது ஒன்று தேர்வுசெய்யவும்.
படி 3: விண்ணப்ப நிலை என்பதை (கிளிக் செய்யவும்) தேர்ந்தெடுக்கவும்.
படி 4: விண்ணப்ப எண் மற்றும் அங்கீகார மதிப்பை (CAPTCHA) உள்ளீடு செய்து சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்து உங்கள் விண்ணப்பத்தை நிலையை சரிபார்த்துக்கொள்ளவும்.

How To Apply Patta Transfer Online