- அரசு (Government) இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் உங்கள் தடுப்பூசி சான்றிதழ்களில் திருத்தங்களைச் செய்யலாம், இது முற்றிலும் கட்டம் இல்ல சேவை.
- உங்களுக்கு தடுப்பூசி செலுத்திய பின்பு நீங்கள் தடுப்பூசி சான்ரு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம், தடுப்பூசிச் சான்றிதழில் சில தவறுகளைக் இருபினும், அதை திருத்தம் செய்ய ஒரு வாய்ப்பு மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கும்.

- தடுப்பூசி சான்றிதழில், பெயர், வயது, பாலினம், பிறந்த தேதி அல்லது புகைப்படம் போன்ற உங்களின் தொடர்பு விவரங்கள் மற்றும் தடுப்பூசியின் பெயர், தடுப்பூசி போடப்பட்ட இடம், தேதி முதலியன, விவரங்களோடு உங்களுக்கு தடுப்பூசி செலுத்தியதற்காக ஒரு ஆவணம் கிடைக்கும், அதை நீங்கள் தேவைப்படும் இடத்தில் காண்பித்தல் போதுமானது.
- நீங்கள் விரும்பினால், அதிகாரப்பூர்வ CoWin இணையதளத்திற்குச் சென்று இதைப் பற்றிய கூடுதல் விவரங்களைப் பெறலாம்.
தடுப்பூசி சான்றிதழ் திருத்தம் (CoWin Correction) செய்வது எப்படி?
படி 1: முதலில் https://cowin.gov.in/ அரசு இணையதளத்தில் உள்நுழைக.
படி 2: இணையதளத்தில் ஆங்கிலம், தமிழ் இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் கிடைக்கிறது,இதில் ஏதாவது ஒன்று தேர்வுசெய்யவும்.
படி 3: தடுப்பூசிக்கு பதிவு செய்க அல்லது உள்நுழைக (Register or Sign In for Vaccination) என்பதை (கிளிக் செய்யவும்) தேர்ந்தெடுக்கவும்.
படி 4: நீங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள தொலைபேசி எண் உள்ளீடு செய்து ஒடிபியைப் பெறவும் (Get OTP) தேர்வு செய்யவும் ,உங்கள் எண்ணில் OTP கிடைக்கும் அதை நீங்கள் உள்ளீடு செய்த பின் சரிபார்த்த பின் தொடங்கும் (Verify & Procced) பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
படி 5: ஒரு சிக்கலை எழுப்பு (Raise an Issue) என்பதை (கிளிக் செய்யவும்) தேர்ந்தெடுக்கவும்.
படி 6: பெயர்/வயது/பாலினம்/புகைப்பட ஐடிதொடர்பான எனது சான்றிதழில் திருத்தம் (Correction in my Certificate regarding Name / Age / Gender / Photo ID) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
படி 7: உறுப்பினரை தேர்ந்தெடுக்கவும் (Select a Member) நீங்கள் மாற்றக்கூடிய உறுப்பினையை தேர்வு செய்து, நீங்கள் மாற்ற விரும்பும் பெயர், பிறந்த ஆண்டு ,பாலினம் அதை CHANGE என்று கிளிக் செய்து உங்கள் சரியான விவரங்களை உள்ளிடவும்.
படி 8: பின்பு Upload File என்பதை தேர்வு செய்து உங்கள் சரியான ஆதார், வோட்டர், பான் கார்டு, இதில் ஏதாவது ஒரு ஆவணத்தை Upload செய்யவும்,தொடரவும் (CONTINUE) என்பதை (கிளிக் செய்யவும்) தேர்ந்தெடுக்கவும்
படி 9: அதன் பிறகு, புதிய பக்கம் தோன்றும், அதில் நீங்கள் ஏற்கனவே உள்ளீடு செய்த விவரங்களை சரிபார்க்கவும், கோரிக்கைசமர்ப்பி (SUBMIT REQUEST) பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
படி 10: இறுதியாக, உங்கள் கோரிக்கை சென்றடைந்து நீங்கள் கொடுத்த கோரிக்கை வெற்றிகரமாய் மாற்றப்பட்டு இருக்கும்.