தமிழக அரசு தமிழக குடிமக்களுக்காக TNPDS ஸ்மார்ட் ரேஷன் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் ரேஷன் கார்டு மூலம் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடையில் மானிய விலையில் ரேஷன் அரிசி, கோதுமை, சக்கரை, சமையல் எண்ணெய் மற்றும் சில பொருட்களை வாங்க பயன்படுகிறது. மேலும் குடும்பத்திற்கு ஒரு அடையாள ஆவணமாக உள்ளது. அனைவரிடமும் இருக்க வேண்டிய அடிப்படை மற்றும் அவசியமான ஆவணமாகும்.
இந்த அட்டை டிஜிட்டல் வடிவில் கிடைக்கும் என்பதால், ரேஷன் கார்டு விநியோக கடையில் பொருட்களை குறைந்த நேரத்தில் வழங்கப்படும் இந்த ஸ்மார்ட் கார்டு இருப்பதால்.
இது தவிர ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு குடிமக்கள் அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் தமிழக அரசு அதிகாரப்பூர்வ போர்ட்டலைத் தொடங்கியுள்ளது. இந்த போர்டல் மூலம், குடிமக்கள் ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம். குடும்ப உறுப்பினரை எளிதில் சேர்க்கவோ நீக்கவோ முகவரி பிழை திருத்தும் செய்யவும் இந்த இணையத்தமாக உருவாக்கப்பட்டது.
புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி ?
புதிதாக ஸ்மார்ட் ரேஷன் ஸார்ட்க்கு விண்ணப்பம் செய்கின்றிகள் என்றால் உங்கள் ஆதார் ஏற்கனவே வேறொரு குடுப்ப உறுப்பினர் விவரத்தில் சேர்க்கப்பட்டு இருந்தால், அதை நீக்கம் செய்த பின்பு புதிய ஸ்மார்ட் ரேஷன் விண்ணப்பிக்கவும்,
படி 1: முதலில் https://www.tnpds.gov.in/ தமிழ்நாடு அரசு இணையதளத்தில் உள்நுழைக.
படி 2: இணையதளத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் கிடைக்கிறது,இதில் ஏதாவது ஒன்று தேர்வுசெய்யவும்.
படி 3: புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க (Apply New Smart Card) என்பதை (கிளிக் செய்யவும்) தேர்ந்தெடுக்கவும்.
படி 4: அதன் பிறகு, புதிய பக்கம் தோன்றும், முதலில் குடும்ப தலைவர் விவரங்களை பெயர், இருப்பிட முகவரியை உள்ளிட்ட வேண்டும கட்டாயம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உங்கள் விவரங்கள் உள்ளிட்ட வேண்டும். அதன் பிறகு, குடும்ப தலைவர் புகைப்படம் பதிவேற்ற (Upload) செய்யவும்.
படி 5: அதன் பிறகு, உங்கள் முகவரி விவரம் மாவட்டம், மண்டலம் / வட்டம், கிராமம் என்பதை (கிளிக் செய்து) தேர்ந்தெடுக்கவும். மேலும், அஞ்சல் குறியீடு, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி விவரங்களை உள்ளிடவும்.
படி 6: உறுப்பினரை சேர்க்க என்பதை கிளிக் செய்து, முதலில் குடும்ப தலைவர் விவரங்களை பூர்த்திசெய்யவும் பிறந்த தேதி, பாலினம், மாத வருமானம் (ரூபாயில்) , ஆதார் எண் போன்ற தகவல்கள் உள்ளிட்ட்து செய்து , சேர்க்கப்படும் உறவினர் ஆதார் நகலை பதிவேற்ற (Upload) செய்யவும் மற்றும் உறுப்பினர் விவரம் சேமி என்பதை கிளிக் செய்யவும்.
படி 7: மருபடியும் உறுப்பினரை சேர்க்க என்பதை கிளிக் செய்து, உங்கள் குடும்பத்தினர் ஒவ்வொன்றாக சேர்க்கவும் பெயர், பிறந்த தேதி, பாலினம், உறவுமுறை, மாத வருமானம் (ரூபாயில்) , ஆதார் எண் போன்ற தகவல்கள் உள்ளிட்ட்து செய்து, குடும்ப தலைவர் ஆதார் நகலை பதிவேற்ற (Upload) செய்யவும் மற்றும் உறுப்பினர் விவரம் சேமி என்பதை கிளிக் செய்யவும்.
படி 8: அதன் பிறகு, கீழே இருக்கும் ஏதாவது ஒன்று தேர்ந்தெடுக்கவும்.
- No Commodity Card பண்டகமில்லா அட்டை
- Rice Card அரிசி அட்டை
- Sugar Card சர்க்கரை அட்டை
- Others மற்றவை
- Police Card காவலர் அட்டை
- Prison Card சிறைத்துறை அட்டை
- Forest Card வனத்துறை அட்டை
படி 9: நீங்கள் வசிக்கும் குடியிருப்புச் சான்று ஆவணத்தின் நகலைக் தேர்ந்தெடுக்கவும். கீழே இருக்கும் ஏதாவது ஒன்று தேர்ந்தெடுக்கவும், ஆதார் கார்டு இருந்தால் மிக சிறந்தது.
- ஆதார் அட்டை
- வங்கி கணக்குப் புத்தகத்தின் முன் பக்கம்
- எரிவாயு நுகர்வோர் அட்டை
- சொந்த வீடு இருந்தால் அதன் சொத்து வரி
- பாஸ்போர்ட்
- வாடகை ஒப்பந்தம் (வாடகைக்கு குடியிருப்போருக்கு)
- குடிசை மாற்று வாரியத்தின் ஒதுக்கீட்டு ஆணை
- தொலைபேசி கட்டணம்
- வாக்காளர் அடையாள அட்டை
- கொத்தடிமை விடுவிப்புச் சான்று
நீங்கள் தேர்வு செய்யப்பட்ட ஆவண நகலை பதிவேற்ற (Upload) செய்யவும் . நீங்கள் பதிவேற்ற 1.0 MB அளவு கீழ் png, gif , jpeg மற்றும் pdf இருக்கவேண்டும். பின்பு, உறுப்பினரை சேர்க்க என்பதை கிளிக் செய்யவேண்டும்.
படி 10 : உங்களிடம் எரிவாயு இணைப்பு இருந்தால் பற்றிய விவரங்கள் அதை பற்றி விவரங்களை கொடுக்கவும், மேலும் நீங்கள் உள்ளீடு செய்த அணைத்து விவரமும் சரிபார்த்து பின்பு உறுதிப்படுத்தல் என்பதை தேர்வு செய்யவும், இறுதியாக பதிவு செய் என்பதை என்பதை கிளிக் செய்யவும், அதன் பிறகு, புதிய பக்கம் தோன்றும் அதில் நீங்கள் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு விண்ணப்பத்திற்கான பதிவு செய்த குறிப்பு எண் கிடைக்கும்.