Total Post

இருப்பிடச் சான்று அப்ளை செய்து எப்படி? | How to Apply Nativity Certificate Online in Tamilnadu

Nativity Certificate இருப்பிட சான்றிதழ் தாசில்தார் அல்லது மண்டல வருவாய் அதிகாரியால் கையொப்பமிடப்பட்டு வழங்கப்படுகிறது. முதலில் நீங்கள் வசிக்கும் கிராமம்/நகரத்தின் கிராம நிர்வாக அதிகாரியை அணுக வேண்டும். அவரது பரிந்துரையின் அடிப்படையில் தாசில்தார் அல்லது மண்டல வருவாய் அதிகாரி சான்றிதழை வழங்குகிறார்.

நீங்கள் ஒரு மாணவராக இருந்து கல்வி நிறுவனத்தில் சேர்க்கைக்கு விண்ணப்பித்தால் நீங்கள் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை படித்த இடம் நேட்டிவிட்டி இடமாகக் கருதப்படுகிறது. குறிப்பிட்ட இடத்தில் படித்ததற்கான சான்றை சமர்ப்பித்தால் தாசில்தார் அல்லது மண்டல வருவாய் அதிகாரி வழங்குவார்கள்.

குறிப்பிட்ட இடத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாக வசிக்கிறார் என்றால் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தாசில்தார் மூலம் வழங்கப்படும். இந்தச் சான்றிதழ் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் வழங்கப்படுகிறது மற்றும் பள்ளிகளில் சேர்க்கை பெறவும், வேலைவாய்ப்பு நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது

இருப்பிட சான்றிதழ் 15 நாட்களுக்குள் வழங்கப்படும்.மேலும் கால அவகாசம் ஆகினால் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தாசில்தார் அலுவரரை நேரில் சென்று அணுகவும்.

Nativity Certificate இருப்பிட சான்றிதழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:

தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாக ஒரே இடத்தில் வாழ்த்துக்கொண்டு இருக்கிறார் என்று ஒரு உறுதிப்படுத்தும் ஆவணம் தேவை.

விண்ணப்பதாரர் இருப்பிட சான்றிதழுக்கு பின்வரும் ஆவணங்கள் தேவை.

nativity certificate in tamilnadu

1. புகைப்படம்
2. விண்ணப்பதாரர் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு.
3. பிறப்புச் சான்றிதழ்
4. பள்ளிக் கல்விச் சான்றிதழ் (அல்லது) வேலைவாய்ப்பு விவரங்கள்(அல்லது) 5 ஆண்டுகள் தொடர்ந்து வசிப்பதை நிரூபிக்கும் மற்ற சான்றுகள்
5. விண்ணப்பதாரரின் சுய அறிவிப்பு(Self-Declaration).

இருப்பிட சான்றிதழ் எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பதாரர் இருப்பிட சான்றிதழ் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம், ஆன்லைனில் விண்ணப்பிக்க நாம் வீட்டில் இருந்தபடியே https://www.tnesevai.tn.gov.in என்ற தமிழ்நாடு அரசு இணையதள மூலமும் அல்லது இ-சேவை மையங்கள் அல்லது CSC (பொது சேவை மையங்கள்) விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் இருப்பிட சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:

படி 1: https://www.tnesevai.tn.gov.in இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.
படி 2: பயனாளர் உள்நுழைக (Citizen Login) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
படி 3: பதிவு செய்யப்பட்ட உங்கள் Username Passwdord உள்ளீடு செய்து Login என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
படி 3: கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் DEPARTMENT WISE == Revenue Department == REV-102 Nativity Certificate என்பதை கிளிக் செய்து தேர்வு செய்யவும்.
படி 4: Process என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு, உங்களிடம் கேன் - (CAN) எண் இல்லை என்றால் Register CAN என்பதை கிளிக் செய்து உங்கள் விவரங்களை பூர்த்தி செய்யவும். உங்களிடம் கேன் CAN நம்பர் இருந்தால் அதை உள்ளிடவும், மறந்து இருந்தால் உங்கள் மொபைல் எண் அல்லது ஆதார் எண்கள் உள்ளீடு செய்து Search என்பதை கிளிக் செய்யவும் .

படி 5: உறுதிப்படுத்தவும் என்பதை கிளிக் செய்யவும். பின்பு, Generate OTP என்பதை கிளிக் செய்து பின் உங்க மொபைல் எண்ணுக்கு வரும் OTP யை உள்ளிடவும். பிறகு, Proceed என்பதை என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
படி 6: புதிய பக்கம் தோன்றும். அதில்,

nativity certificate required documents

Category Nativity:
1.Nativity By Birth certificate (பிறப்புச் சான்றிதழ் மூலம் நேட்டிவிட்டி)
OR-அல்லது
2.Nativity By Residence (குடியிருப்பு மூலம் நேட்டிவிட்டி )
நீங்கள் கொடுக்கப்பட்டுள்ள கேன் - CAN விவரங்களை சரிபார்த்து கொள்ளவும். பிறகு, இந்த பக்கம் இறுதியில்

how to apply nativity certificate apply online in tamilnadu

Form Details With Address For the Past Years in descending order

District மாவட்டம், Taluk வட்டம், Revenue Village கிராமம் என்பதை தேர்வுசெய்து கிளிக் செய்யவும்
Street Name, Door No, From Date and To Date, Pin Code/அஞ்சல் எண் என்னும் விவரங்களை உள்ளீடு செய்யவும்.

என்னும் இரண்டில் ஒன்றை தேர்வு செய்து கிளிக் செய்யவும்

படி 7: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணத்தின் நகலை ஸ்கேன் காப்பிய யாக SCAN COPY பதிவேற்றம் (Upload) செய்யவும்
1.Photo
2.Any Address Proof (Aadhar and Ration Card)
3.Birth Certificate
4.School Education Certificate(or) Employment Details(or)other proof to prove continuous residence of 5 years Mandatory
5.Self-Declaration of Applicant

tnega nativity certificate download in tamilnadu

படி 8: இறுதியாக, Make a Payment என்பதை கிளிக் செய்து 60 ரூபாய் இணையதளம் மூலம் செலுத்திய பின்பு, நீங்கள் விண்ணப்பம் செய்யப்பட்ட நகல் அதாவது ஒப்புகை சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.

சாதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்வது எப்படி ?

  • தமிழ்நாடு அரசு https://tnedistrict.tn.gov.in இணையதளத்தில் உள்நுழைக.
  • தேடல் பெட்டியில் (acknowledgement no) ஒப்புகை சீட்டு சான்றிதழ் எண்ணை உள்ளிடவும், தேடுக என்ற Icon என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • நீங்கள் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம். மேலும், உங்கள் விண்ணப்பம் அனுமதிக்கப்பட்டு இருந்தால் அதை Download என்பதை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.