Total Post

வருமானச் சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? | How to apply income certificate online in Tamilnadu?

வருமானச் சான்றிதழ் என்பது குடிமகனின் ஆண்டு வருமானம் குறித்து அரசாங்கத்தால் குடிமக்களுக்கு வழங்கப்படும் ஒரு ஆவணம் ஆகும். வருமானம் சான்றிதழ் பெரும்பாலும் மாணவர்களின் சேர்க்கை, உதவித்தொகை மற்றும் பிற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

வருமானச் சான்றிதழைப் பெற விண்ணப்பித்த நாளிலிருந்து 15 நாட்கள் வரை ஆகும். மேலும் கால அவகாசம் ஆகினால் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தாசில்தார் அலுவரரை நேரில் சென்று அணுகவும். வழங்கப்பட்ட தேதியிலிருந்து 1 வருடத்திற்கு மட்டுமே வருமானம் சான்றிதழ் செல்லுபடியாகும். விண்ணப்பதாரர் ரூ.60 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

Income Certificate வருமானச் சான்றிதழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:

தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாக ஒரே இடத்தில் வாழ்த்துக்கொண்டு இருக்கிறார் என்று ஒரு உறுதிப்படுத்தும் ஆவணம் தேவை.

வருமானச் சான்றிதழுக்கு தேவையான ஆவணங்கள்.

ncome certificate apply online tamilnadu
how to apply income

1. விண்ணப்பதாரர் புகைப்படம்
2.விண்ணப்பதாரர் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு.
3.TIN எண் மற்றும் வர்த்தகம்
4. நிலம் வைத்திருக்கும் விவரங்கள்
5. வார்டு வாரியாக சொந்தமான வீடுகளின் விவரங்கள்
6. குடும்பம் அல்லது ஸ்மார்ட் கார்டு
7. விண்ணப்பதாரரின் சுய அறிவிப்பு (Self-Declaration).
8. சம்பளச் சான்றிதழ் (சமீபத்திய நகல்)
9. பான் கார்டு

வருமானச் சான்றிதழ் எப்படி விண்ணப்பிப்பது?

வருமானச் சான்றிதழ் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம், ஆன்லைனில் விண்ணப்பிக்க வீட்டில் இருந்தபடியே https://www.tnesevai.tn.gov.in என்ற தமிழ்நாடு இணையதள மூலமும் அல்லது இ-சேவை மையங்கள் அல்லது CSC (பொது சேவை மையங்கள்) விண்ணப்பிக்கலாம்.

வருமானச் சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:

படி 1: https://www.tnesevai.tn.gov.inதமிழ்நாடு இணையதளத்தில் உள்நுழைக வேண்டும்.
படி 2: பயனாளர் உள்நுழைக என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
படி 3: பதிவு செய்யப்பட்ட உங்கள் பயனர் உள்நுழை ID மற்றும் பஸ்வர்ட் உள்ளீடு செய்து Login என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
படி 3: கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் DEPARTMENT WISE (goto) Revenue Department (goto) REV-103 Income Certificate என்பதை கிளிக் செய்து தேர்வு செய்யவும்.
படி 4: Procees என்பதை கிளிக் செய்ய வேண்டும். உங்களிடம் கேன் CAN நம்பர் இருந்தால் அதை உள்ளிடவும், மறந்து இருந்தால் உங்கள் மொபைல் எண் அல்லது ஆதார் எண்கள் உள்ளீடு செய்து Search என்பதை கிளிக் செய்யவும் .

படி 5: Generate OTP என்பதை கிளிக் செய்து மொபைல் எண்ணுக்கு வரும் OTP யை உள்ளிடவும். பிறகு Proceed என்பதை என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
படி 6: புதிய பக்கம் தோன்றும். அதில்,

Details of Family Members
Total number of family members,
Name பெயர், Age Sex, Relation. Profession, Monthly Income Annual Income
Source of Income:
Income
Agriculture and Allied
Salary
Business
Rent
Monthly Income(In Rs.)
Annual Income(In Rs.)
Grand Total(In Rs.)

போன்ற விவரங்களை பூர்த்தி செய்து, Add என்பதை தேர்வு செய்து Submit பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

படி 7: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணத்தின் நகலை SCAN COPY பதிவேற்றம் செய்யவும்
1.Applicant Photo Mandatory
2.Any Address Proof Mandatory
3.Details of Land Holdings
4.Family or Smart Card Mandatory
5.Self-Declaration of Applicant

படி 8: இறுதியாக, Make a Payment என்பதை கிளிக் செய்து ரூ:60 ரூபாய் இணையதளம் மூலம் செலுத்திய பின்பு, நீங்கள் விண்ணப்பம் செய்யப்பட்ட நகல் அதாவது ஒப்புகை சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.