Total Post

முதல் பட்டதாரி சான்றிதழ் ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது? | How to Apply First Graduate Certificate online in Tamilnadu?

முதல் பட்டதாரி சான்றிதழ் என்பது குடும்பத்தின் நீங்கள் முதல் பட்டதாரியாக இருந்தால் முதல் பட்டதாரிக்கு சான்றிதழ் (No Graduate Certificate) வழங்கப்படும். தமிழக அரசின் சலுகைகளைப் பெறுவீர்கள். தமிழக அரசின் இருந்து உதவித்தொகையைப் பெறலாம்.

முதல் முதலில் குடும்ப உறுப்பினர் இருந்து மேல் படிப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இச்சான்று தாசில்தார் மூலம் (No Graduate Certificate) வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு இ-சேவையைப் பயன்படுத்தி முதல் பட்டதாரி சான்றிதழை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். TN eSevai ஒருவர் எப்படி முதல் பட்டதாரி சான்றிதழைப் விண்ணப்பிப்பது என்பதை பார்ப்போம்.

முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:

  • உங்கள் குடும்பத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பைத் தொடரும் முதல் நபர் நீங்கள் என்றால், இந்த முதல் பட்டதாரி சான்றிதழுக்கு நீங்கள் தகுதியானவர்.
  • உங்கள் தந்தை, தாய் அல்லது மூத்த தங்கை/சகோதரர்கள் ஏற்கனவே பட்டப்படிப்பை முடித்திருந்தால், நீங்கள் இந்தச் சான்றிதழுக்கு தகுதி இல்லாதவர்.

முதல் பட்டதாரி சான்றிதழுக்கு தேவையான ஆவணங்கள்.

first graduate certificate apply online in tamilnadu

1. விண்ணப்பதாரர் புகைப்படம்
2. விண்ணப்பதாரர் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு.
3. விண்ணப்பதாரர் இடமாற்றச் சான்றிதழ் (Transfer Certificate)
4. தந்தையின் சுய அறிவிப்பு (Self-Declaration)
5. தாயின் சுய அறிவிப்பு (Self-Declaration)
6. தந்தை இடமாற்றச் சான்றிதழ் (Transfer Certificate)
7. தாய் இடமாற்றச் சான்றிதழ் (Transfer Certificate)
8. விண்ணப்பதாரரின் சுய அறிவிப்பு (Self-Declaration)
9. தற்போதைய கல்வி ஆண்டு சான்றிதழ்கள்

முதல் பட்டதாரி சான்றிதழ் எப்படி விண்ணப்பிப்பது?

முதல் பட்டதாரி சான்றிதழ் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம், ஆன்லைனில் விண்ணப்பிக்க வீட்டில் இருந்தபடியே https://www.tnesevai.tn.gov.in என்ற தமிழ்நாடு இணையதள மூலமும் அல்லது இ-சேவை மையங்கள் அல்லது CSC (பொது சேவை மையங்கள்) விண்ணப்பிக்கலாம்.

முதல் பட்டதாரி சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:

படி 1: https://www.tnesevai.tn.gov.inதமிழ்நாடு இணையதளத்தில் உள்நுழைக வேண்டும்.
படி 2: பயனாளர் உள்நுழைக என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
படி 3: பதிவு செய்யப்பட்ட உங்கள் பயனர் உள்நுழை ID மற்றும் பஸ்வர்ட் உள்ளீடு செய்து Login என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
படி 3: கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் DEPARTMENT WISE (goto) Revenue Department (goto) REV-104 First Graduate Certificate என்பதை கிளிக் செய்து தேர்வு செய்யவும்.
படி 4: Process என்பதை கிளிக் செய்ய வேண்டும். உங்களிடம் கேன் CAN நம்பர் இருந்தால் அதை உள்ளிடவும், மறந்து இருந்தால் உங்கள் மொபைல் எண் அல்லது ஆதார் எண்கள் உள்ளீடு செய்து Search என்பதை கிளிக் செய்யவும் .

படி 5: Generate OTP என்பதை கிளிக் செய்து மொபைல் எண்ணுக்கு வரும் OTP யை உள்ளிடவும். பிறகு Proceed என்பதை என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
படி 6: புதிய பக்கம் தோன்றும். அதில்,

Graduation Details (பட்டப்படிப்பு விவரங்கள்):

  • வேறு யாரேனும் குடும்பத்தில் இருந்து பட்டப்படிப்பைப் படித்து முடித்திருந்தால்: ஆம் அல்லது இல்லை என்பதை தேர்வு செய்யவும்
    If any other person pursuing completed Graduation from Family: Choose Yes or No
  • If any applicants sibling is pursuing Drop out graduation: Choose Yes or No
    விண்ணப்பதாரர்கள் யாரேனும் உடன்பிறந்தவர்கள் பட்டப்படிப்பைத் தொடர்ந்தால் / இடைநிறுத்தப்பட்டால்: ஆம் அல்லது இல்லை என்பதை தேர்வு செய்யவும்.first graduate scholarship apply online in tamilnadu

Details of Family Members/குடும்ப உறுப்பினர்கள்:

Name பெயர், Age வயது, Qualification கல்வித் தகுதி, Relation உறவு, Whether Alive ? உயிருடன் உள்ளார?
போன்ற விவரங்களை பூர்த்தி செய்து, Add என்பதை தேர்வு செய்யவும், இதே போன்று உங்க குடும்ப உறுப்பினர் விவரங்களை பூர்த்தி செய்து Add என்பதை தேர்வு செய்யவும்.

Education Details (கல்வி விவரங்கள்):

  • Course Completed
  • Year of Passing
  • Current Course
  • Current Academic Year
  • Name of the Institute கல்வி நிறுவத்தின் பெயர்
  • Institution Address கல்வி நிறுவத்தின் முகவரி

how to apply first graduate certificate online in tamilnadu

போன்ற விவரங்களை பூர்த்தி செய்து Submit பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

படி 7: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணத்தின் நகலை SCAN COPY பதிவேற்றம் செய்யவும்
1.Applicant Photo
2.Any Address Proof
3.Applicant Transfer Certificate
4.Father Transfer Certificate
5.Self-Declaration of Applicant

tnega first graduate certificate in tamilnadu

படி 8: இறுதியாக, Make a Payment என்பதை கிளிக் செய்து ரூ:60 ரூபாய் இணையதளம் மூலம் செலுத்திய பின்பு, நீங்கள் விண்ணப்பம் செய்யப்பட்ட நகல் அதாவது ஒப்புகை சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.