ஸ்மார்ட் ரேஷன் கார்டு புதிதாக குடும்ப அட்டை வாங்க நினைத்தாலோ அல்லது குடும்பத்தில் இருந்து திருமணம் ஆகியிருந்தாலோ அல்லது குடும்பத்தில் ஒருவர் தவறினாலோ, நாம் குடும்ப அட்டையில் இருந்து சம்மந்தப்பட்ட நபரை நீக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு இணையதளத்தில் நாம் ஸ்மார்ட் ரேஷன் கார்டு புதிதாக விண்ணப்பம் செய்யவோ, பெயர் நீக்கவோ சேர்க்கவோ செய்யலாம், இணையதள மூலம் நாம் விண்ணப்பம் செய்த நிலையையும் அறிந்து கொள்ளலாம், நீங்கள் குடும்பத்தில் உள்ள நபரை நீக்கம் செய்யணும் என்று அவசியம் ஏற்பட்டால், கீழே கொடுக்கப்பட்ட செயல்முறையில் பின்பற்றவும்,
ஸ்மார்ட் ரேஷன் கார்டு குடும்ப உறுப்பினரை நீக்கம் செய்வது எப்படி?
படி 1: முதலில் https://www.tnpds.gov.in/ தமிழ்நாடு அரசு இணையதளத்தில் உள்நுழைக.
படி 2: இணையதளத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் கிடைக்கிறது,இதில் ஏதாவது ஒன்று தேர்வுசெய்யவும்.
படி 3: கீழே கொடுக்கப்பட்ட சேவையில் குடும்ப உறுப்பினர் நீக்க கிளிக் செய்யவும். பிறகு, புதிய பக்கம் தோன்றும் அதில் பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணை உள்ளீடு செய்து பிறகு கேப்ட்சா குறியீடு உள்ளீடு செய்து பதிவு செய் என்பதை கிளிக் செய்யவும், நீங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வந்த (OTP) எண்ணை உள்ளிடவும். பிறகு, பதிவு செய் கிளிக் செய்ய வேண்டும்.
படி 4: புதிய பக்கம் தோன்றும் அதில், நீங்கள் நீக்க விரும்பும் குடும்ப உறுப்பினரை என்ன காரணத்தால் நீக்கம் செய்கின்றிர்கள் என்று ஆவண வகையைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்வு செய்யப்பட்ட ஆவணத்தின் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- Death Certificate(இறப்பு சான்றிதழ்)
- Marriage Certificate (திருமண சான்றிதழ்)
- Adoption Certificate (தத்தெடுப்பு சான்றிதழ்)
- Others Certificate (இதர சான்றிதழ்)
படி 5: பின்பு, நீங்கள் நீக்க விரும்பும் நபரின் காரணம் என்னவோ அதை ஆங்கிலம் மற்றும் தமிழில் உள்ளிட வேண்டும், மேலும் நீக்க நினைக்கும் நபரை தேர்வு செய்ய வேண்டும்.
படி 6: நீங்கள் உள்ளீடு செய்த அணைத்து விவரமும் சரிபார்த்து பின்பு உறுதிப்படுத்தல் என்பதை (கிளிக் செய்யவும்) தேர்ந்தெடுக்கவும். இறுதியாக, பதிவு செய் என்பதை என்பதை கிளிக் செய்யவும.
படி 7: நீங்கள் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் குறிப்பு எண் கிடைக்கும் மற்றும் நீங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறிப்பு எண் வந்திருக்கும், உங்கள் விண்ணப்ப கோரிக்கை 1 இருந்து 4 நாட்களில் சரியாக இருக்கும் பட்சத்தில்(அனுமதி) அல்லது தவறாக இருக்கும் பட்சத்தில் (ரிஜெக்ட்) செயல்முறை படுத்தி இருப்பார்கள், குறிப்பு எண் வைத்து உங்கள் விண்ணப்ப நிலையை சரிபார்த்து கொள்ளவும்.
விண்ணப்பத்தின் நிலையை அறிவது எப்படி?
படி 1: முதலில் https://www.tnpds.gov.in/ இணையதளத்தில் உள்நுழைக.
படி 2: கீழே கொடுக்கப்பட்ட சேவையில் அட்டை தொடர்பான சேவை நிலை அறிய கிளிக் செய்யவும்.
படி 3: பிறகு, உங்கள் எண்ணுக்கு அனுப்பப்பட்ட குறிப்பு எண் உள்ளீடு செய்து உங்கள் விண்ணப்ப நிலையை சரிபார்த்துக்கொள்ளவும்.